Dailyhunt Logo
  • Light mode
    Follow system
    Dark mode
    • Play Story
    • App Story
பயணிகள் கவனத்திற்கு.. ஜூலை 14 முதல் செப்டம்பர் 1 வரை.. ஓணம் சிறப்பு ரயில்கள் அறிவிப்பு.. முழு தகவல் இதோ..!!

பயணிகள் கவனத்திற்கு.. ஜூலை 14 முதல் செப்டம்பர் 1 வரை.. ஓணம் சிறப்பு ரயில்கள் அறிவிப்பு.. முழு தகவல் இதோ..!!

கேரளா மக்களின் முக்கிய பண்டிகையான ஓணத்தை முன்னிட்டு, சென்னையில் இருந்து மங்களூரு மற்றும் கொல்லம் நகரங்களுக்கு சிறப்பு ரயில்கள் இயக்கப்பட உள்ளதாக தென்னக ரயில்வே அறிவித்துள்ளது.

குறிப்பாக, சென்னை எழும்பூரில் இருந்து திருப்பூர், ஈரோடு, போத்தனூர் வழியாக மங்களூருவுக்கு இந்த சிறப்பு ரயில்கள் இயக்கப்படுகின்றன. பண்டிகை காலங்களில் ஏற்படும் கடுமையான கூட்ட நெரிசலைக் குறைக்கவும், பயணிகள் தங்களின் சொந்த ஊர்களுக்கு எளிதாகப் பயணம் செய்யவும் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

​இந்த எழும்பூர் - மங்களூரு சிறப்பு ரயில்கள் நடப்பு ஜூலை மாதத்தில் 14, 21, 28 ஆகிய தேதிகளிலும், அதனைத் தொடர்ந்து ஆகஸ்ட் மாதத்தில் 4, 11, 18, 25 ஆகிய தேதிகளிலும் மற்றும் செப்டம்பர் 1-ஆம் தேதியும் இயக்கப்பட உள்ளன. இந்த சிறப்பு ரயில் சென்னை எழும்பூர் ரயில் நிலையத்திலிருந்து மதியம் 2:00 மணிக்கு மங்களூரு நோக்கிப் புறப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதற்கான முன்பதிவுகள் விரைவில் தொடங்க உள்ளதால் பயணிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

Dailyhunt
Disclaimer: This content has not been generated, created or edited by Dailyhunt. Publisher: Seithisolai