Dailyhunt Logo
  • Light mode
    Follow system
    Dark mode
    • Play Story
    • App Story
"பெண்களுக்குப் பாதுகாப்பே இல்லையா?" நடுப்பகலில் நடந்த அராஜகம்.. வேடிக்கை பார்த்த பயணிகள்.. ரயில் நிலையத்தில் நடந்த வெறிச்செயல்.. வீடியோ இதோ..!!"

"பெண்களுக்குப் பாதுகாப்பே இல்லையா?" நடுப்பகலில் நடந்த அராஜகம்.. வேடிக்கை பார்த்த பயணிகள்.. ரயில் நிலையத்தில் நடந்த வெறிச்செயல்.. வீடியோ இதோ..!!"

மும்பை தாதர் ரயில் நிலையம் அருகே ஒரு பெண் கொடூரமான முறையில் தாக்கப்பட்ட வீடியோ சமூக வலைதளங்களில் வெளியாகிப் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

அந்த வீடியோவில், ஒரு நபர் அந்தப் பெண்ணை மீண்டும் மீண்டும் காலால் உதைத்து தாக்கும் காட்சிகள் பதிவாகியுள்ளன.

இதுமட்டுமின்றி, பாதிக்கப்பட்ட பெண்ணை அந்த நபர் தண்டவாளத்தில் இழுத்துச் செல்லும் காட்சிகள் பார்ப்பவர்களை உறைய வைக்கின்றன. அந்தப் பெண் தன்னைத் தற்காத்துக் கொள்ளப் போராடிய போதிலும், அந்த நபர் தொடர்ந்து தாக்குதலைத் தொடுத்துள்ளார்.

இந்தச் சம்பவம் நடக்கும்போது, பிளாட்பாரத்தில் பல பயணிகள் இருந்தபோதிலும், யாரும் அந்தப் பெண்ணைக் காப்பாற்ற முன்வரவில்லை என்பது பெரும் சோகத்தையும் ஆத்திரத்தையும் ஏற்படுத்தியுள்ளது.

இந்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலானதைத் தொடர்ந்து, மும்பை காவல்துறை இந்த விவகாரத்தைக் கையில் எடுத்து, வழக்கை அரசு ரயில்வே காவல்துறையிடம் ஒப்படைத்துள்ளது.

">

எனினும், சம்பந்தப்பட்ட நபர் மற்றும் பெண் யார் என்பது குறித்தோ அல்லது அவர் கைது செய்யப்பட்டாரா என்பது குறித்தோ இதுவரை எந்த அதிகாரப்பூர்வத் தகவலும் வெளியாகவில்லை. இந்தச் சம்பவத்திற்கு எதிராகப் பொதுமக்கள் மற்றும் நெட்டிசன்கள் கடும் கண்டனங்களைத் தெரிவித்து வருகின்றனர்.

Dailyhunt
Disclaimer: This content has not been generated, created or edited by Dailyhunt. Publisher: Seithisolai