Dailyhunt Logo
  • Light mode
    Follow system
    Dark mode
    • Play Story
    • App Story
போலீசின் அதிரடி சேஸிங்.. கஞ்சா ஆசாமியை ஓட ஓட விரட்டிப் பிடித்த தனிப்படை.. சிதம்பரத்தில் நடந்த அதிரடி வேட்டை..!!

போலீசின் அதிரடி சேஸிங்.. கஞ்சா ஆசாமியை ஓட ஓட விரட்டிப் பிடித்த தனிப்படை.. சிதம்பரத்தில் நடந்த அதிரடி வேட்டை..!!

கடலூர் மாவட்டம் சிதம்பரத்தில் கோவிந்தராஜன் என்ற கூலித் தொழிலாளியின் வீட்டிற்குள் புகுந்து, அவரை ஓட ஓட விரட்டி கொடூரமாக வெட்டிய வழக்கில் முக்கிய குற்றவாளியான கஞ்சா ஆசாமி ராகுலை போலீசார் சினிமா பட பாணியில் சேஸிங் செய்து அதிரடியாகக் கைது செய்துள்ளனர்.

இந்தத் துணிகர கொலை முயற்சி சம்பவத்திற்குப் பிறகு தலைமறைவாக இருந்த ராகுலைத் தனிப்படை போலீசார் தீவிரமாகத் தேடி வந்த நிலையில், ராகுல் பதுங்கியிருந்த இடத்தை ரகசியத் தகவலின் பேரில் போலீசார் சுற்றி வளைத்தனர்.

​போலீசாரைக் கண்டதும் அதிர்ச்சியடைந்த கஞ்சா ஆசாமி ராகுல், தனது பைக்கால் போலீஸ் வாகனத்தை வேகமாக இடித்துத் தள்ளியபடி அங்கிருந்து தப்பி ஓட முயன்றுள்ளான். இருப்பினும், சற்றும் பின்வாங்காத போலீசார் ராகுலை சினிமா பட பாணியில் நீண்ட தூரம் விடாமல் துரத்திச் சென்று, மடக்கிப் பிடித்து இரும்புக்கரம் கொண்டு கைது செய்தனர். இவ்வாறு அதிரடியாகக் கைது செய்யப்பட்டுள்ள ராகுல் மீது ஏற்கனவே பல்வேறு காவல் நிலையங்களில் வழிப்பறி மற்றும் அடிதடி உள்ளிட்ட பல குற்ற வழக்குகள் நிலுவையில் உள்ளது குறிப்பிடத்தக்கது.

Dailyhunt
Disclaimer: This content has not been generated, created or edited by Dailyhunt. Publisher: Seithisolai