Dailyhunt Logo
  • Light mode
    Follow system
    Dark mode
    • Play Story
    • App Story
"போனில் பேசும் பாய்ஸ், கேர்ள்ஸை ஜெயில்ல போடுங்க!" ராமரின் சட்டம்தான் வரணும். கலாச்சாரத்தைக் காக்கச் சொல்லி நபர் செய்த ரகளை வீடியோ இணையத்தில் வைரல்.!!

"போனில் பேசும் பாய்ஸ், கேர்ள்ஸை ஜெயில்ல போடுங்க!" ராமரின் சட்டம்தான் வரணும். கலாச்சாரத்தைக் காக்கச் சொல்லி நபர் செய்த ரகளை வீடியோ இணையத்தில் வைரல்.!!

யூடியூப் (YouTube) சேனல் ஒன்றின் நேர்காணலில் நபர் ஒருவர் பேசிய கருத்துக்கள், தற்பொழுது சமூக வலைத்தளங்களில் ஒரு மிகப்பெரிய விவாதப் பொருளாக மாறியுள்ளது.

அந்த நேர்காணலில் பேசிய நபர், "திருமணம் ஆகாத ஆண் மற்றும் பெண் பிள்ளைகள் தங்களுக்குள் போனில் பேசுவதைத் தடை செய்ய வேண்டும்.

அரசு அவர்களின் அழைப்புகளைக் கண்காணித்து, அவர்களைச் சிறையில் அடைக்க வேண்டும்" என்று மிகவும் தீவிரமான கருத்தைப் பதிவு செய்துள்ளார். மேலும், "ஆண்களும் பெண்களும் திருமணத்திற்குப் பிறகுதான் ஒருவரையொருவர் சந்தித்துப் பேச வேண்டும்; திருமணத்திற்கு முன்பு 'டேட்டிங்' (Dating) செய்வது நமது கலாச்சாரத்திற்கு எதிரானது" என்றும் அவர் அந்த வீடியோவில் குறிப்பிட்டுள்ளார்.

அதோடு நிறுத்தாமல், "நமது நாடு ஒரு இந்து ராஷ்டிரம் (Hindu Rashtra); இங்கே ஸ்ரீ ராமரின் சட்டம்தான் நிலவ வேண்டும்" என்றும் அவர் அந்த நேர்காணலில் பேசியுள்ளார். இந்த வீடியோ மற்றும் அதன் கேப்ஷன்கள் இணையத்தில் வைரலாகி வரும் நிலையில், இதைப் பார்த்த நெட்டிசன்கள் மற்றும் சமூக ஆர்வலர்கள் பலரும் தங்களது கடுமையான கண்டனங்களைப் பதிவு செய்து வருகின்றனர்.

"நவீன உலகிலும், தனிமனித சுதந்திரத்திலும் தலையிடும் இதுபோன்ற கருத்துக்கள் தீவிரவாத மற்றும் பிற்போக்குத்தனமான மனநிலையின் வெளிப்பாடு" என்று சாடும் நெட்டிசன்கள், 'இது போன்ற தீவிர இந்துத்துவ மனநிலை கொண்டவர்களால்தான் சமூக கட்டமைப்பு சீரழிகிறது' என்றும் கமெண்ட்டுகளில் தங்களது அதிருப்தியையும் விமர்சனங்களையும் காரசாரமாகப் பகிர்ந்து வருகின்றனர்.

Dailyhunt
Disclaimer: This content has not been generated, created or edited by Dailyhunt. Publisher: Seithisolai