தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜய் நேற்று நெல்லை மற்றும் தூத்துக்குடி தொகுதிகளில் சூறாவளி பிரசாரம் மேற்கொண்டார்.
அப்போது பிரசார வாகனத்தில் அவர் ரோடு ஷோ சென்றபோது, தொண்டர்கள் அவருக்கு ஒரு வினோதமான மற்றும் சிறப்பான மாலையை அணிவித்தனர். அது வழக்கமான பூமாலையோ அல்லது பணமாலையோ கிடையாது. தமிழக வெற்றிக் கழகத்தின் சின்னமான 'விசில்' கொண்டு அந்த மாலை உருவாக்கப்பட்டிருந்தது.
அதுவும் கட்சிக் கொடியின் நிறத்திலேயே விசில்களைக் கோர்த்து பிரம்மாண்ட மாலையாகத் தயாரித்து விஜய்க்கு அணிவித்து மகிழ்ந்தனர். தொண்டர்களின் இந்த வித்தியாசமான அன்பைப் பார்த்து நெகிழ்ந்து போன விஜய், புன்னகையுடன் அதனை ஏற்றுக்கொண்டார். தற்போது இந்த 'விசில்' மாலை காணொளி சமூக வலைதளங்களில் (X) செம வைரலாகி வருகிறது.

