Dailyhunt
"பூமியை விட்டுப் பிரிந்த வீரர்கள்!".. விண்வெளியில் இருந்து அனுப்பிய அந்த ஒரு புகைப்படம்.. இணையத்தைக் கலக்கும் வைரல் கிளிப்..!!

"பூமியை விட்டுப் பிரிந்த வீரர்கள்!".. விண்வெளியில் இருந்து அனுப்பிய அந்த ஒரு புகைப்படம்.. இணையத்தைக் கலக்கும் வைரல் கிளிப்..!!

மெரிக்காவின் விண்வெளி ஆராய்ச்சி நிறுவனமான நாசா, நிலவுக்கு மீண்டும் மனிதர்களை அனுப்பும் தனது லட்சியத் திட்டமான 'ஆர்டெமிஸ்-2' பயணத்தை வெற்றிகரமாகத் தொடங்கியுள்ளது.

கனடா நாட்டு வீரர் உட்பட நான்கு பேர் கொண்ட இந்தக் குழுவினர், விண்கலத்தின் உயிர் காக்கும் வசதிகளைச் சோதித்த பிறகு தற்போது நிலவை நோக்கிப் பயணித்து வருகின்றனர்.

சுமார் 8.64 லட்சம் கோடி ரூபாய் மதிப்பிலான இந்த வரலாற்றுப் பயணத்தில், நிலவின் மறுபக்கத்தை மிக நெருக்கமாகவும் நேரடியாகவும் காணும் முதல் மனிதர்கள் என்ற சாதனையை இவர்கள் படைக்க உள்ளனர்.

இந்த விண்வெளி வீரர்கள் பூமியை விட்டுப் பிரிந்து செல்லும் வேளையில், விண்வெளியில் இருந்து பூமியின் பிரகாசமான நீல நிற அழகைப் புகைப்படம் எடுத்துள்ளனர். இந்தப் புகைப்படத்தை நாசா வெளியிட்டுள்ள நிலையில், அது தற்போது இணையத்தில் தீயாய் பரவி வருகிறது.

இந்த ஆர்டெமிஸ்-2 பயணம், 2028-ஆம் ஆண்டு மனிதர்கள் நிலவில் தரை இறங்குவதற்கு ஒரு முக்கியமான முன்னோட்டமாக அமையும் என்று விஞ்ஞானிகள் கருதுகின்றனர்.

Dailyhunt
Disclaimer: This content has not been generated, created or edited by Dailyhunt. Publisher: Seithisolai