Dailyhunt
Breaking: அதிமுக ஆட்சி அமைத்தால் கடன் தள்ளுபடி செய்யப்படும்.. எடப்பாடி பழனிச்சாமி கொடுத்த அதிரடி வாக்குறுதி.!!!

Breaking: அதிமுக ஆட்சி அமைத்தால் கடன் தள்ளுபடி செய்யப்படும்.. எடப்பாடி பழனிச்சாமி கொடுத்த அதிரடி வாக்குறுதி.!!!

மிழகத்தில் வரவிருக்கும் சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி விவசாயிகளுக்கான முக்கிய வாக்குறுதிகளை அதிரடியாக அறிவித்துள்ளார்.

தமிழகத்தில் அதிமுக மீண்டும் ஆட்சி அமைத்தால் விவசாயிகளுக்கு இருபத்தி நான்கு மணி நேரமும் மும்முனை மின்சாரம் தங்குதடையின்றி வழங்கப்படும் என்று அவர் உறுதி அளித்துள்ளார்.

மேலும் விவசாயிகளின் நீண்ட கால கோரிக்கையான பயிர்க்கடன் தள்ளுபடி செய்யப்படும் என்ற மிகப்பெரிய வாக்குறுதியையும் அவர் தற்போது வழங்கியுள்ளார். விவசாயிகளின் வாழ்வாதாரத்தை மேம்படுத்தும் நோக்கில் இந்த அறிவிப்புகள் வெளியிடப்பட்டுள்ளதாக அவர் தனது உரையில் குறிப்பிட்டுள்ளார்.

ஏற்கனவே அதிமுகவின் தேர்தல் அறிக்கையில் பல்வேறு கடன் தள்ளுபடி திட்டங்கள் இடம்பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது. குறிப்பாக மாணவர்களின் கல்வி கடன் தள்ளுபடி மற்றும் நடைபாதை வியாபாரிகளின் கடன் தள்ளுபடி உள்ளிட்ட முக்கிய வாக்குறுதிகள் ஏற்கனவே அறிவிக்கப்பட்டுள்ளன.

இதனைத் தொடர்ந்து தற்போது விவசாயிகளுக்கான பயிர்க்கடன் தள்ளுபடி மற்றும் தடையில்லா மின்சாரம் குறித்த அறிவிப்புகள் அதிமுகவின் தேர்தல் பிரச்சாரத்தில் புதிய வேகத்தை ஏற்படுத்தியுள்ளது. எடப்பாடி பழனிசாமியின் இந்த அதிரடி அறிவிப்புகள் கிராமப்புற வாக்காளர்களிடையே பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளதுடன் அரசியல் வட்டாரத்தில் விவாதங்களைக் கிளப்பியுள்ளது.

Dailyhunt
Disclaimer: This content has not been generated, created or edited by Dailyhunt. Publisher: Seithisolai