தமிழக வெற்றி கழகம் 108 தொகுதிகளில் வெற்றி பெற்றுள்ள நிலையில் பெரும்பான்மைக்கு இன்னும் பத்து தொகுதிகள் தேவைப்படுகிறது.
திருச்சி கிழக்கில் நடிகர் விஜய் ராஜினாமா செய்யக்கூடும் என்பதால் கிட்டத்தட்ட 11 முதல் 12 எம்எல்ஏக்கள் வரை இன்னும் நடிகர் விஜயின் தமிழக வெற்றிக் கழகத்திற்கு தேவைப்படுகிறது. இதன் காரணமாக அவர் காங்கிரஸ் கட்சிக்கு கடிதம் அனுப்பியுள்ள நிலையில் அவர்கள் தமிழக வெற்றி கழகத்திற்கு ஆதரவு நிலைப்பாட்டை எடுத்துள்ளதாக கூறப்படுகிறது.
இந்த நிலையில் எடப்பாடி பழனிச்சாமியை நடிகர் விஜய் நேரில் சந்தித்து ஆதரவு கேட்டதாக இன்று காலை செய்திகள் வெளியானது. ஆனால் இதனை தற்போது அந்தக் கட்சியின் நீர்வை செயலாளர். நிர்மல் குமார் அடுத்துள்ளார். இது தொடர்பாக பிரபல ஊடகத்திற்கு அவர் அளித்த பேட்டியில் தேசிய ஜனநாயக கூட்டணியில் இடம் பெற்றுள்ள எந்த கட்சி உடனும் தமிழக வெற்றிக்கழகம் பேச்சுவார்த்தை நடத்தவில்லை என கூறியுள்ளார். மேலும் இதன் மூலம் எடப்பாடி பழனிச்சாமியிடம் தமிழக வெற்றிக்கழகம் பேச்சுவார்த்தை நடத்தவில்லை என்பது உறுதியாகியுள்ளது.

