புதுச்சேரி சட்டமன்றத் தேர்தலுக்கான வாக்கு எண்ணிக்கை விறுவிறுப்பாக நடைபெற்று வரும் நிலையில், அதிமுக தனது முதல் வெற்றியைப் பதிவு செய்துள்ளது.
உப்பளம் தொகுதியில் போட்டியிட்ட அதிமுக வேட்பாளர் அன்பழகன், தன்னை எதிர்த்துப் போட்டியிட்ட வேட்பாளர்களைக் காட்டிலும் கூடுதல் வாக்குகளைப் பெற்று வெற்றி வாகை சூடியுள்ளார்.
நான்கு சுற்றுகளாக நடைபெற்ற வாக்கு எண்ணிக்கையின் முடிவில் தொடக்கத்திலிருந்தே முன்னிலை வகித்து வந்த அதிமுக வேட்பாளர் அன்பழகன், இறுதிச் சுற்றின் முடிவில் தமிழக வெற்றிக் கழகத்தின் (தவெக) வேட்பாளர் சிவாவை விட 1,026 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
புதுச்சேரி தேர்தல் களத்தில் அதிமுக பெற்றுள்ள இந்த முதல் வெற்றி, அக்கட்சியினரிடையே பெரும் உற்சாகத்தை ஏற்படுத்தியுள்ளது. இதில் அன்பழகன் அதிமுக 9,099, சிவா தவெக 8,073
அனிபால் கென்னடி திமுக 5,327 வாக்குகளை பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கதாகும்.

