Dailyhunt
Breaking: இறங்கிய வேகத்தில் ஏறிய தங்கம் விலை.. ஒரே நாளில் ரூ.1440 அதிகரிப்பு. பேரதிர்ச்சியில் இல்லத்தரசிகள்.!!!

Breaking: இறங்கிய வேகத்தில் ஏறிய தங்கம் விலை.. ஒரே நாளில் ரூ.1440 அதிகரிப்பு. பேரதிர்ச்சியில் இல்லத்தரசிகள்.!!!

சென்னையில் தங்கம் விலை இன்று காலை மற்றும் பிற்பகல் என இருமுறை அதிரடி மாற்றங்களைச் சந்தித்துள்ளது. காலையில் ஒரு சவரன் தங்கம் விலையில் 1020 ரூபாய் குறைந்து மக்களுக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்த நிலையில் பிற்பகலில் திடீரென 1140 ரூபாய் உயர்ந்து பேரதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இதன் காரணமாக சென்னையில் 22 கேரட் ஆபரணத் தங்கம் ஒரு கிராம் 180 ரூபாய் அதிகரித்து 13,990 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது. ஒரு சவரன் தங்கம் ஒரு 1,11920 ரூபாய் என்ற புதிய உச்சத்தை எட்டியுள்ளது.

கடந்த மார்ச் மாதத்தில் தங்கம் விலையில் பெரும் சரிவு காணப்பட்ட நிலையில் ஏப்ரல் மாதம் தொடங்கியதில் இருந்தே விலை தொடர்ந்து அதிகரித்து வருவது குறிப்பிடத்தக்கது. சர்வதேச சந்தையில் நிலவும் பொருளாதார மாற்றங்கள் மற்றும் தேவைகளின் அதிகரிப்பு காரணமாகத் தங்கத்தின் விலை இவ்வாறு ஏற்ற இறக்கத்தைச் சந்தித்து வருவதாகக் கூறப்படுகிறது.

ஒரே நாளில் காலையில் குறைந்த விலை பிற்பகலில் அதிரடியாக உயர்ந்தது நடுத்தர மக்களிடையே பெரும் கவலையை ஏற்படுத்தியுள்ளது. தங்கம் விலை வரும் நாட்களில் மேலும் உயருமா அல்லது குறையுமா என்பது குறித்த எதிர்பார்ப்புகள் சந்தை வட்டாரத்தில் எழுந்துள்ளன.

Dailyhunt
Disclaimer: This content has not been generated, created or edited by Dailyhunt. Publisher: Seithisolai