தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய் தற்போது காங்கிரஸ் மற்றும் கம்யூனிஸ்ட் கட்சிகளிடம் ஆதரவு கேட்டு கடிதம் அனுப்பியுள்ளார்.
இதன் காரணமாக இந்திய கம்யூனிஸ்ட் மற்றும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் ஆகிய கட்சிகள் அவசர ஆலோசனை கூட்டத்தை நடத்த முடிவு செய்துள்ளது. இதற்கிடையில் நேற்று டெல்லியில் ராகுல் காந்தி தலைமையிலான ஆலோசனை கூட்டத்தில் தமிழக வெற்றி கழகத்திற்கு முடிவெடுப்பது தொடர்பாக தமிழக காங்கிரஸ் கமிட்டி முடிவு செய்து கொள்ளலாம் என அறிவித்துள்ளது.
இதன் காரணமாக இன்று காலை 11 மணியளவில் தமிழக வெற்றிக்கழகத்திற்கு ஆதரவு கொடுப்பது தொடர்பான அறிவிப்பை காங்கிரஸ் அதிகாரப்பூர்வமாக வெளியிடுகிறது. இந்த நிலையில் தற்போது விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல் திருமாவளவனுக்கும் தமிழக வெற்றிக்கழகம் ஆதரவு கேட்டு கடிதம் அனுப்பி உள்ளது. மேலும் இதனால் தற்போது விடுதலை சிறுத்தைகள் கட்சியும் ஆதரவு கொடுப்பது தொடர்பாக நிர்வாகிகளுடன் தீவிர ஆலோசனையில் ஈடுபட்டுள்ளதாக கூறப்படுகிறது.

