Dailyhunt
Breaking: காலையிலேயே அடுத்த அடி.! 5 கிலோ எடையுள்ள சிலிண்டர் விலை ஒரே நாளில் ரூ.261 உயர்வு. அதிர்ச்சியில் மக்கள்..!!

Breaking: காலையிலேயே அடுத்த அடி.! 5 கிலோ எடையுள்ள சிலிண்டர் விலை ஒரே நாளில் ரூ.261 உயர்வு. அதிர்ச்சியில் மக்கள்..!!

ந்தியாவில் சமையல் எரிவாயு சிலிண்டர்களின் விலை அவ்வப்போது மாற்றியமைக்கப்பட்டு வரும் நிலையில், இன்று வணிகப் பயன்பாட்டிற்கான சிலிண்டர்களின் விலை முன்எப்போதும் இல்லாத வகையில் மிகக் கடுமையாக உயர்த்தப்பட்டுள்ளது.

அதன்படி 19 கிலோ எடை கொண்ட வணிகப் பயன்பாட்டு சிலிண்டரின் விலை ஒரே அடியாக ரூ.993 உயர்த்தப்பட்டது. இந்த அதிரடி மாற்றத்தைத் தொடர்ந்து, தற்போது சிறிய வகை சிலிண்டர்களின் விலையிலும் கைவைக்கப்பட்டுள்ளது.

குறுகிய காலத் தேவைகளுக்காகவும், சிறிய உணவகங்கள் மற்றும் தெருவோர வியாபாரிகளால் அதிகம் பயன்படுத்தப்படும் 5 கிலோ எடை கொண்ட சிறிய வகை சிலிண்டர் விலை, இன்று ஒரே நாளில் ரூ.261 உயர்த்தப்பட்டுள்ளது.

இந்தத் திடீர் விலையேற்றத்தால் மக்கள் பெரும் சுமைக்கு ஆளாவார்கள் என்று அஞ்சப்படுகிறது. குறிப்பாக குறுகிய கால அவசரத் தேவைக்காக சிலிண்டர் பயன்படுத்துவோர். சிறிய வகை உணவகங்கள் மற்றும் நடமாடும் உணவு வண்டிகள் வைத்திருப்போர். குறைந்த வருமானம் கொண்ட தற்காலிக குடியிருப்பாளர்கள் அதிகளவில் பாதிக்கப்படுகிறார்கள். ஏற்கனவே அத்தியாவசியப் பொருட்களின் விலை உயர்ந்து வரும் நிலையில், எரிவாயு விலையில் ஏற்பட்டுள்ள இந்த 'மெகா' உயர்வு பொதுமக்களிடையே பெரும் கவலையை ஏற்படுத்தியுள்ளது.

Dailyhunt
Disclaimer: This content has not been generated, created or edited by Dailyhunt. Publisher: Seithisolai