Dailyhunt
Breaking: நான் ஆட்சிக்கு வந்தால். மகளிருக்கு 1 பவுன் தங்கம்.. விஜய் கொடுத்த மெகா வாக்குறுதி.!!!

Breaking: நான் ஆட்சிக்கு வந்தால். மகளிருக்கு 1 பவுன் தங்கம்.. விஜய் கொடுத்த மெகா வாக்குறுதி.!!!

திருச்சி கிழக்கு சட்டமன்றத் தொகுதியில் போட்டியிடும் தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜய், இன்று வேட்புமனுத் தாக்கல் செய்த பின் நடத்திய அதிரடிப் பிரச்சாரத்தில் மகளிருக்கான கவர்ச்சிகரமான வாக்குறுதிகளை வாரி வழங்கியுள்ளார்.

"தமிழகத்தில் தற்போது நிலவும் சமையல் எரிவாயு தட்டுப்பாட்டைப் போக்க முதலமைச்சர் ஸ்டாலின் ஏன் டெல்லி சென்று மத்திய அரசிடம் கோரிக்கை விடுக்கவில்லை? தனது குடும்பப் பிரச்சினைகளுக்காக மட்டும் டெல்லி செல்லும் அவர், மக்கள் நலனுக்காகச் செல்லத் தயங்குவது ஏன்?" என விஜய் காட்டமாகக் கேள்வி எழுப்பினார்.

மேலும், தனது கட்சி ஆட்சிக்கு வந்தால் மகளிருக்கு மாதந்தோறும் ₹2,500 உதவித்தொகை வழங்கப்படும் என்றும், ஏழைப் பெண்களுக்குத் திருமண உதவியாக 1 பவுன் தங்கம் மற்றும் பட்டுப்புடவை வழங்கப்படும் என்றும் உறுதி அளித்தார். விஜய்யின் இந்த 'மெகா' அறிவிப்புகள் திருச்சி தேர்தல் களத்தில் பெரும் அனலைக் கிளப்பியுள்ளது.

Dailyhunt
Disclaimer: This content has not been generated, created or edited by Dailyhunt. Publisher: Seithisolai