Dailyhunt
Breaking: தமிழகத்தில் சதம் அடித்தது தவெக. 100 இடங்களில் முன்னிலை. நடிகர் விஜயின் வீடு அலுவலகத்திற்கு கூடுதல் போலீஸ் பாதுகாப்பு.!!!

Breaking: தமிழகத்தில் சதம் அடித்தது தவெக. 100 இடங்களில் முன்னிலை. நடிகர் விஜயின் வீடு அலுவலகத்திற்கு கூடுதல் போலீஸ் பாதுகாப்பு.!!!

மிழகத்தில் சட்டமன்ற தேர்தல் களம் சூடுபிடிக்க தொடங்கியுள்ள நிலையில் இன்று வாக்கு எண்ணிக்கை காலை 8:00 மணி முதல் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.

கடந்த ஏப்ரல் 23ஆம்தமிழகத்தில் சட்டமன்ற தேர்தல் நடைபெற்றது. இதேபோன்று அசாம், மேற்குவங்கம் மற்றும் கேரளா ஆகிய மாநிலங்களிலும் தேர்தல் நடைபெற்ற நிலையில் இன்று மொத்தமாக வாக்கு எண்ணிக்கை நடைபெறுகிறது. இந்த நிலையில் இன்று காலை முதல் தொடர்ந்து தமிழக வெற்றிக்கழகம் பல தொகுதிகளில் முன்னிலையில் இருக்கிறது.

அந்த வகையில் தற்போது தமிழக கட்சி கழகம் கிட்டத்தட்ட 100 இடங்களில் முன்னிலையில் இருக்கிறது. தமிழகத்தில் உள்ள 234 தொகுதிகளில் மொத்தம் 118 தொகுதிகளில் வெற்றி பெறும் கட்சி ஆட்சியைப் பிடிக்கும் நிலையில் காலை முதலே பெரும்பாலான இடங்களில் தமிழக வெற்றி கழகம் முன்னிலையில் இருக்கிறது. இதன் காரணமாக தமிழக வெற்றி கழகம் ஆட்சியைப் பிடிக்கும் நிலையில் இருப்பதாக கூறப்படும் நிலையில் அதிமுக இரண்டாவது இடத்திலும் திமுக மூன்றாவது இடத்தில் இருக்கிறது.

மேலும் இந்த நிலையில் தமிழக வெற்றி கழகம் தொடர்ந்து முன்னிலையில் இருப்பதால் தற்போது தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜயின் வீடு மற்றும் அலுவலகத்திற்கு கூடுதலாக பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. அதாவது வெற்றி பெற்றால் ரசிகர்கள் மற்றும் தொண்டர்கள் அதிக அளவில் கூடுவார்கள் என்பதால் இப்போதே பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.

Dailyhunt
Disclaimer: This content has not been generated, created or edited by Dailyhunt. Publisher: Seithisolai