தமிழகத்தில் ஏப்ரல் 23ஆம் தேதி சட்டசபை தேர்தல் நடைபெற உள்ளது. இதனை முன்னிட்டு தேர்தல் விதிமுறைகள் அமலான நிலையில் முக்கிய அதிகாரிகள் மற்றும் போலீஸ் அதிகாரிகளை தேர்தல் ஆணையம் மாற்றி வருகிறது.
அந்த வகையில் தற்போது தமிழகத்தின் சட்டமூலங்கு டிஜிபி அதிரடியாக மாற்றப்பட்டுள்ளார்.

அதன்படி தமிழகத்தின் சட்டம் ஒழுங்கு டிஜிபியாக சந்தீப் ராய் ரத்தோரை நியமிக்க வேண்டும் என தேர்தல் ஆணையம் தலைமைச் செயலாளருக்கு அதிரடியாக உத்தரவு பிறப்பித்து கடிதம் அனுப்பியது. மேலும் அந்த உத்தரவு படி தற்போது தமிழகத்தின் சட்டம் ஒழுங்கு டிஜிபியாக சந்தீப் ராய் ரத்தோர் நியமிக்கப்பட்டுள்ளார். மேலும் கடந்த 1992 பேட்ச் ஐபிஎஸ் அதிகாரியான இவர் தற்போது பயிற்சி கல்லூரியில் டிஜிபியாக இருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கதாகும்.

