Dailyhunt
Breaking: தவெக-வுக்கு முதல் வெற்றி.! விஜய்யின் அரசியல் கணக்கு ஆரம்பம்..!!!

Breaking: தவெக-வுக்கு முதல் வெற்றி.! விஜய்யின் அரசியல் கணக்கு ஆரம்பம்..!!!

மிழகச் சட்டமன்றத் தேர்தல் 2026-ன் மிகப்பெரிய அதிர்ஷ்டவசமான முதல் வெற்றியைப் பதிவு செய்து, தமிழக வெற்றிக் கழகம் தனது கணக்கைத் தூத்துக்குடியில் மாஸாகத் தொடங்கியுள்ளது.

திமுகவின் அசைக்க முடியாத கோட்டை எனக் கருதப்பட்ட தூத்துக்குடியில், அமைச்சர் கீதா ஜீவனை சுமார் 30,000 வாக்குகள் வித்தியாசத்தில் வீழ்த்தி தவெக வேட்பாளரும் நடிகருமான ஸ்ரீநாத் வரலாற்றுச் சாதனை புரிந்துள்ளார். "தளபதி" விஜய்யின் அரசியல் வருகைக்குக் கிடைத்த முதல் அங்கீகாரமாகப் பார்க்கப்படும் இந்த வெற்றி, ஒட்டுமொத்த அரசியல் வட்டாரத்தையே அதிர வைத்துள்ளது.

பலம் வாய்ந்த அமைச்சரையே ஒரு புதிய கட்சியின் வேட்பாளர் வீழ்த்தியிருப்பதால், தூத்துக்குடி மாவட்டம் முழுவதும் தவெக தொண்டர்கள் பட்டாசு வெடித்தும், இனிப்புகள் வழங்கியும் திருவிழாக் கோலமாகக் கொண்டாடி வருகின்றனர்.

Dailyhunt
Disclaimer: This content has not been generated, created or edited by Dailyhunt. Publisher: Seithisolai