தமிழக அரசியலில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ள சூழலில், தமிழக வெற்றிக் கழகம் (தவெக) ஆட்சி அமைப்பதற்கு ஆதரவு அளிப்பது குறித்து விடுதலைச் சிறுத்தைகள் கட்சி (விசிக) நாளை முக்கிய முடிவை எடுக்க உள்ளது.
விசிக தலைவர் தொல். திருமாவளவன் தலைமையில் நாளை கட்சியின் உயர்நிலைக் குழு ஆலோசனைக் கூட்டம் நடைபெற உள்ளது. தவெக தலைவர் விஜய் ஆட்சி அமைப்பதற்கு ஆதரவு வழங்குவது குறித்து இந்த கூட்டத்தில் விரிவாக விவாதிக்கப்பட்டு இறுதி முடிவு எடுக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
ஏற்கனவே தமிழக வெற்றிக் கழகத்திற்கு காங்கிரஸ் கட்சி அதிகாரப்பூர்வமாக ஆதரவு கொடுத்த நிலையில் மார்க் லிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மற்றும் இந்திய கம்யூனிஸ்ட் கட்சிகளும் விஜய்க்கு ஆதரவு கொடுப்பது தொடர்பாக ஆலோசனை கூட்டங்களை நடத்த உள்ளது. மேலும் இந்த நிலையில் தற்போது விடுதலை சிறுத்தைகள் கட்சியும் ஆலோசனை கூட்டத்தில் இறங்கியுள்ளது.
காங்கிரஸ் கட்சியை தொடர்ந்து கம்யூனிஸ்ட் மற்றும் விடுதலை சிறுத்தைகள் கட்சி ஆதரவு கொடுத்தால் கிட்டத்தட்ட 11 எம்எல்ஏக்கள் ஆதரவு கிடைக்கும் தமிழக வெற்றி கழகம் ஆட்சி அமைக்க தேவையான பெருபான்மை கிடைத்துவிடும் என்பதால் இன்னும் தமிழக அரசியல் களம் சில நாட்களுக்கு பரபரப்பாகவே இருக்கும் என்பது குறிப்பிடத்தக்க.

