Dailyhunt Logo
  • Light mode
    Follow system
    Dark mode
    • Play Story
    • App Story
Breaking: திமுகவுடன் ஆன கூட்டணி முடிந்து விட்டது.. எம்பி மாணிக்கம் தாகூர் அதிரடி அறிவிப்பு. இன்று வெளியாகிறது குட் நியூஸ்.!!

Breaking: திமுகவுடன் ஆன கூட்டணி முடிந்து விட்டது.. எம்பி மாணிக்கம் தாகூர் அதிரடி அறிவிப்பு. இன்று வெளியாகிறது குட் நியூஸ்.!!

மிழகத்தில் திராவிட கட்சிகளை பின்னுக்கு தள்ளி தமிழக வெற்றி கழகம் 108 இடங்களை கைப்பற்றி ஆட்சி அமைக்க தயாராகி வருகிறது.

இருப்பினும் பெரும்பான்மைக்கு இன்னும் பத்து இடங்கள் தேவைப்படுவதால் காங்கிரஸ் மற்றும் கம்யூனிஸ்ட் கட்சிகளிடம் ஆதரவு கேட்டு தமிழக வெற்றி கழகம் கடிதம் அனுப்பியது. இந்த நிலையில் ராகுல் காந்தி தலைமையிலான ஆலோசனைக் கூட்டத்தின் போது தமிழக மக்களின் உணர்வுகளுக்கு மதிப்பு கொடுத்து தமிழக காங்கிரஸ் கமிட்டி தமிழக வெற்றிக் கழகத்திற்கு ஆதரவு கொடுப்பது தொடர்பாக முடிவெடுக்கலாம் என கே.சி வேணுகோபால் அறிவித்துள்ளார். இதன் காரணமாக இன்று காலை 11 மணியளவில் கிரிஷ் சோடங்கர் தமிழக வெற்றி கழகத்திற்கு ஆதரவு பற்றிய அதிகாரப்பூர்வ அறிவிப்பை வெளியிட இருப்பதாக மாணிக்கம் தாகூர் கூறியுள்ளார்.

இது தொடர்பாக விமான நிலையத்தில் செய்தியாளர்களை சந்தித்த மாணிக்கம் தாகூர் கூறியதாவது, தமிழக வெற்றி கழகத்திற்கு ஆதரவு கொடுப்பது தொடர்பாக நேற்றைய முடிவு செய்யப்பட்டு விட்டது. இன்று காலை அந்த முடிவை காங்கிரஸ் அறிவிக்கும். தமிழக சட்டமன்ற தேர்தல் முடிவுகளை திமுக கட்சிக்கு எதிரான முடிவுகளாகவே பார்க்க வேண்டும். மேலும் திமுகவுடன் ஆன கூட்டணி தேர்தலுக்கான கூட்டணி அது தேர்தல் முடிந்த உடனே முடிந்துவிட்டது என்றார். இதன் காரணமாக தமிழக வெற்றிக் கழகத்திற்கு காங்கிரஸ் ஆதரவு கொடுக்க இருப்பது கிட்டத்தட்ட உறுதியாகிவிட்டது.

Dailyhunt
Disclaimer: This content has not been generated, created or edited by Dailyhunt. Publisher: Seithisolai