தமிழகச் சட்டமன்றத் தேர்தல் 2026 வாக்கு எண்ணிக்கையில், தூத்துக்குடி தொகுதியில் ஆளுங்கட்சியின் மிக முக்கியமான முகமான அமைச்சர் கீதா ஜீவனுக்கு எதிராக, நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகம் சார்பில் களம் கண்ட ஸ்ரீநாத் வெற்றி பெற்று அரசியல் வட்டாரத்தையே அதிர வைத்துள்ளார்.
ஆரம்பத்திலிருந்தே முன்னணியில் இருந்த இந்தத் தொகுதியில், அடுத்தடுத்த சுற்று முடிவுகளில் ஸ்ரீநாத் கணிசமான வாக்குகள் வித்தியாசத்தில் அமைச்சரைப் பின்னுக்குத் தள்ளி 'வெற்றி' முகம் காட்டி வருகிறார். சுமார் 30,000 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி.. "தூத்துக்குடி திமுகவின் எஃகு கோட்டை" எனக் கருதப்பட்ட நிலையில், தவெக வேட்பாளர் ஸ்ரீநாத்தின் இந்த விஸ்வரூபம் அமைச்சரின் ஆதரவாளர்களிடையே கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மக்கள் மாற்றத்தை விரும்பி தவெக-விற்கு வாக்களித்துள்ளனரா அல்லது திராவிடக் கோட்டையில் விரிசல் விழுந்துள்ளதா என விவாதங்கள் அனல் பறக்கின்றன.

