Dailyhunt
Breaking: துள்ளாத மனமும் துள்ளும் படத் தயாரிப்பாளர் ஆர்‌பி சவுத்ரி மரணம். தவெக தலைவர் விஜய் நேரில் வந்து அஞ்சலி.!!!

Breaking: துள்ளாத மனமும் துள்ளும் படத் தயாரிப்பாளர் ஆர்‌பி சவுத்ரி மரணம். தவெக தலைவர் விஜய் நேரில் வந்து அஞ்சலி.!!!

மிழ், மலையாளம், தெலுங்கு மற்றும் ஹிந்தி உள்ளிட்ட மொழிகளில் 90-க்கும் மேற்பட்ட படங்களை தயாரித்தவர் ஆர்பி சவுத்ரி.

தன்னுடைய குட் பிலிம்ஸ் நிறுவனத்தின் மூலம் ஏராளமான படங்களை தயாரித்த அவர் தன்னுடைய நூறாவது பட தயாரிப்பில் ஈடுபட்டிருந்ததாக கூறப்படுகிறது. இவர் நடிகர் விஜய் நடிப்பில் வெளிவந்த பூவே உனக்காக மற்றும் துள்ளாத மனமும் துள்ளும், சரத்குமார் நடிப்பில் வெளிவந்த சூரியவம்சம் மற்றும் நாட்டாமை உள்ளிட்ட சூப்பர் ஹிட் படங்களை தயாரித்துள்ளார். இவர் ராஜஸ்தான் மாநிலம் உதய்பூருக்கு சென்றிருந்தபோது நேற்று கார் விபத்தில் சிக்கி உயிரிழந்தார்.

இவர் பிரபல நடிகர்கள் ஜீவா மற்றும் ஜித்தன் ரமேஷ் ஆகியோரின் தந்தை என்பது குறிப்பிடத்தக்கது. இவரது உடல் சென்னைக்கு கொண்டுவரப்பட்டுள்ள நிலையில் காலை முதலே ஏராளமான ரசிகர்களும் அரசியல் கட்சி தலைவர்களும் நேரில் சென்று அஞ்சலி செலுத்தி வருகின்றனர். அந்த வகையில் தற்போது தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவரும் தமிழ்நாட்டின் முதல்வராக பொறுப்பேற்க இருக்கும் விஜயும் நேரில் வந்து அஞ்சலி செலுத்தியுள்ளார். மேலும் அவரது தந்தை எஸ்கே சந்திரசேகர் சற்று நேரத்திற்கு முன்பு அஞ்சலி செலுத்தியது குறிப்பிடத்தக்கது.

Dailyhunt
Disclaimer: This content has not been generated, created or edited by Dailyhunt. Publisher: Seithisolai