Dailyhunt
BREAKING: விஜய்க்கு அதிர்ச்சி கொடுத்த தமிழக கவர்னர் - திக் திக் நிமிடங்களில் தமிழக அரசியல்..!!

BREAKING: விஜய்க்கு அதிர்ச்சி கொடுத்த தமிழக கவர்னர் - திக் திக் நிமிடங்களில் தமிழக அரசியல்..!!

மிழகச் சட்டமன்றத் தேர்தல் 2026 முடிவுகளில் தனிப்பெரும் கட்சியாக உருவெடுத்த தவெக-வுக்குப் புதிய அரசு அமைக்க உரிமை கோர வாய்ப்புள்ளதா என்ற கேள்வி எழுந்த நிலையில், தவெக தலைவர் விஜய்க்குத் தமிழக ஆளுநர் ஆர்.வி.

அர்லேகர் திடீர் அரசியல் முட்டுக்கட்டை போட்டுள்ளார்.

தவெக தலைவர் விஜய் தனக்குத் பெரும்பான்மை ஆதரவு இருப்பதாகக் கடிதம் எழுதியிருந்த நிலையில், அதற்குப் பதிலளித்துள்ள ஆளுநர், "ஆட்சி அமைக்கத் தேவையான பெரும்பான்மையான 118 அல்லது அதற்கு மேற்பட்ட சட்டமன்ற உறுப்பினர்களின் (MLAs) அதிகாரப்பூர்வ ஆதரவுக் கடிதத்துடன் மட்டுமே தன்னைச் சந்திக்க வர வேண்டும்" என திட்டவட்டமாகத் தெரிவித்துள்ளார்.

இது குறித்து ஆங்கில ஊடகமான சிஎன்என் நியூஸ் 18 (CNN News 18) நிறுவனத்திற்குப் பேட்டியளித்துள்ள ஆளுநர் அர்லேகர், தவெக-வுக்கு ஆட்சி அமைக்கத் தான் இன்னும் அதிகாரப்பூர்வமாக அழைப்பு விடுக்கவில்லை என்பதைப் பகிரங்கமாக உடைத்துள்ளார். ஆளுநரின் இந்த அதிரடி நிபந்தனையைத் தொடர்ந்து, தங்களுக்குத் தேவையான எஞ்சிய 10 இடங்களை எப்படியாவது திரட்டிப் பெரும்பான்மையை நிரூபிக்கத் தவெக தரப்பில் தீவிரப் பேச்சுவார்த்தைகள் முடுக்கிவிடப்பட்டுள்ளன; குறிப்பாகக் காங்கிரஸ், பாமக மற்றும் அமமுக ஆகிய கட்சிகளுடன் தவெக ரகசிய ஆலோசனைகளில் ஈடுபட்டு வருவதாகக் கோட்டை வட்டாரத்தில் பரபரப்பாகப் பேசப்படுகிறது.

Dailyhunt
Disclaimer: This content has not been generated, created or edited by Dailyhunt. Publisher: Seithisolai