Dailyhunt
புதை குழியில் சிக்கிய அமெரிக்கா. எங்கள் பலம் பற்றி உங்களுக்குத் தெரியாது. அதிபர் டிரம்பின் முகத்திரையைக் கிழித்த ஈரான்.!!!

புதை குழியில் சிக்கிய அமெரிக்கா. எங்கள் பலம் பற்றி உங்களுக்குத் தெரியாது. அதிபர் டிரம்பின் முகத்திரையைக் கிழித்த ஈரான்.!!!

ரான் நாட்டை முழுமையாக அழித்துவிடுவோம் என்று அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் விடுத்த எச்சரிக்கைக்கு ஈரான் ராணுவம் இன்று மிகக் கடுமையான பதிலடி கொடுத்துள்ளது.

அமெரிக்கா தனது தோல்வியை ஒப்புக்கொண்டு நிபந்தனையற்ற சரணாகதி அடையும் வரை இந்த போர் ஓயாது என்று ஈரான் புரட்சிகர காவல்படை தெரிவித்துள்ளது.

ஈரானின் கடற்படை மற்றும் வான்படை உள்ளிட்ட ராணுவ கட்டமைப்புகளை அழித்துவிட்டதாக டிரம்ப் கூறி வருவது முற்றிலும் பொய்யானது என்றும் ஈரானின் உண்மையான ராணுவ பலம் மற்றும் ரகசிய ஆயுதக் கிடங்குகள் குறித்து அமெரிக்க உளவு அமைப்புகளுக்கு முறையான தகவல்கள் ஏதுமில்லை என்றும் அந்நாட்டு ராணுவத் தலைமையகம் விளக்கம் அளித்துள்ளது.

ஈரானின் போர் வியூகங்கள் குறித்து அமெரிக்கா அரைகுறை அறிவுடன் செயல்பட்டு வருவதாக ஈரான் குற்றம் சாட்டியுள்ளது. தங்களது அதிநவீன ஏவுகணைகள் மற்றும் ஆளில்லா விமானங்கள் உள்ளிட்ட எவ்வித போர் தளவாடங்களையும் ஈரான் இழக்கவில்லை என்றும் மாறாக அமெரிக்கா ஒரு மிகப்பெரிய புதை குழியில் சிக்கிக் கொண்டுள்ளதாகவும் ஈரான் ராணுவம் எச்சரித்துள்ளது.

முஸ்லிம் நாடுகளுக்கு எதிராக அமெரிக்கா மேற்கொண்டு வரும் இந்த ஆக்கிரமிப்பு நடவடிக்கைக்கு அவர்கள் மிகப்பெரிய விலையைக் கொடுக்க வேண்டியிருக்கும் என்று ஈரான் ராணுவ செய்தித் தொடர்பாளர் தெரிவித்துள்ளார். ஏற்கனவே அமெரிக்காவிற்கு கொடுக்கப்பட்ட பலத்த அடிகளை விட இனி வரும் காலங்களில் இன்னும் பல மடங்கு அழிவுகளை அமெரிக்கா சந்திக்க நேரிடும் என்றும் ஈரான் பகிரங்கமாக மிரட்டல் விடுத்துள்ளது.

டிரம்பின் மிரட்டலுக்குப் பணியாமல் போர்க்களத்தில் நேருக்கு நேர் சந்திக்கத் தயார் என்று ஈரான் அறிவித்துள்ளதால் மேற்காசியாவில் போர் பதற்றம் தற்பொழுது புதிய உச்சத்தை எட்டியுள்ளது.

Dailyhunt
Disclaimer: This content has not been generated, created or edited by Dailyhunt. Publisher: Seithisolai