Dailyhunt
"டூப்ளிகேட்" விஜய்களுக்கு விழுந்த அடி.. விஜய்யை வீழ்த்தப் பார்த்த "நேம் பாலிடிக்ஸ்" தோல்வி - 1.2 லட்சம் வாக்குகளுடன் கெத்து காட்டிய தளபதி..!!

"டூப்ளிகேட்" விஜய்களுக்கு விழுந்த அடி.. விஜய்யை வீழ்த்தப் பார்த்த "நேம் பாலிடிக்ஸ்" தோல்வி - 1.2 லட்சம் வாக்குகளுடன் கெத்து காட்டிய தளபதி..!!

சென்னை பெரம்பூர் தொகுதியில் தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் ஜோசப் விஜய், எவராலும் எட்ட முடியாத உயரத்தைத் தொட்டு வரலாற்றுச் சாதனை படைத்துள்ளார்.

வாக்கு எண்ணிக்கை முடிவில் அவர் மொத்தம் 1,20,365 வாக்குகளைப் பெற்று, அத்தொகுதியின் அசைக்க முடியாத சக்தியாக உருவெடுத்துள்ளார். தேர்தல் களத்தில் விஜய்யின் வெற்றியைத் தடுக்க, அதே பெயரைக் கொண்ட பலரைச் சுயேச்சையாகக் களமிறக்கி குழப்பம் விளைவிக்கப் பார்த்த எதிர்த்தரப்பினருக்கு, மக்கள் சரியான பதிலடி கொடுத்துள்ளனர்.

​குறிப்பாக, விஜய் என்ற பெயரிலும், ஜோசப் என்ற பெயரிலும் போட்டியிட்ட மாற்று வேட்பாளர்கள் அனைவரும் மிகக்குறைந்த வாக்குகளையே பெற்றுள்ளனர். விஜய் (AIJMK) 216 வாக்குகளும், சுயேச்சையாகப் போட்டியிட்ட ஜி.விஜய் 90, எஸ்.ஜோசப் 77 மற்றும் எம்.ஜோசப் 43 வாக்குகளை மட்டுமே பெற்று படுதோல்வி அடைந்துள்ளனர். "பெயர் ஒன்றுதான், ஆனால் மக்கள் மனதை வென்றவர் இவரே" என்பதை நிரூபிக்கும் வகையில், பெரம்பூர் மக்கள் விஜய்க்கு இந்த மாபெரும் அங்கீகாரத்தை வழங்கியுள்ளனர்.

Dailyhunt
Disclaimer: This content has not been generated, created or edited by Dailyhunt. Publisher: Seithisolai