Dailyhunt
"ட்ரம்ப் ஒரு வாத்து". மேடையிலேயே விளாசிய இஸ்ரேல் அதிகாரி. ஈரான் போர் நிறுத்தத்தில் வெடித்த மோதல்.!!!

"ட்ரம்ப் ஒரு வாத்து". மேடையிலேயே விளாசிய இஸ்ரேல் அதிகாரி. ஈரான் போர் நிறுத்தத்தில் வெடித்த மோதல்.!!!

ரான் மற்றும் அமெரிக்கா இடையே கடந்த ஆறு வாரங்களாகத் தொடர்ந்து நடைபெற்று வந்த போர், தற்போது இரண்டு வார கால தற்காலிக போர் நிறுத்த ஒப்பந்தத்தின் மூலம் ஒரு முடிவுக்கு வந்துள்ளது.

கடந்த பிப்ரவரி 28ம் தேதி இஸ்ரேலுடன் இணைந்து அமெரிக்கா நடத்திய தாக்குதல்களில் ஈரானில் இரண்டாயிரத்திற்கும் மேற்பட்டோர் உயிரிழந்த நிலையில், ஹார்மூஸ் ஜலசந்தியைத் திறக்கக் கோரி அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்ப் கடும் எச்சரிக்கை விடுத்திருந்தார். அணு உலைகளைத் தாக்குவோம் என்று விதிக்கப்பட்ட காலக்கெடு முடிவடைந்த நிலையில், சர்வதேச நாடுகளின் வரவேற்பைப் பெற்றுள்ள இந்த போர் நிறுத்த ஒப்பந்தம் ஏற்பட்டுள்ளது.

இந்த அமைதிப் பேச்சுவார்த்தை ஒரு முக்கிய முன்னேற்றமாகக் கருதப்பட்டாலும், இஸ்ரேல் அரசின் அதிகார மையத்தினர் மத்தியில் இதற்குப் பலத்த எதிர்ப்பு கிளம்பியுள்ளது. இஸ்ரேலின் தேசியப் பாதுகாப்பு குழுத் தலைவர் ஸ்விகா போகல், டொனால்ட் டிரம்ப் நீங்கள் ஒரு வாத்தைப் போல வெளியே வந்துள்ளீர்கள் என்று தனது எக்ஸ் பக்கத்தில் கூறியுள்ளார். அதேபோன்று எதிர்க்கட்சித் தலைவர் யாயிர் லேபிட், அதிபர் ட்ரம்ப்பின் இந்த முடிவை ஒரு அரசியல் தோல்வி என்று விமர்சித்துள்ளனர்.

இஸ்ரேலின் பாதுகாப்பு தொடர்பான முக்கிய முடிவுகளில் தங்களை ஆலோசிக்காமல் அமெரிக்கா தன்னிச்சையாகச் செயல்பட்டது ஒரு அரசியல் பேரிடர் என்று அவர்கள் சாடியுள்ளனர். இருப்பினும், பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு அலுவலகம் ட்ரம்ப்பின் இந்த அறிவிப்பை வரவேற்றுள்ளது.

அதே வேளையில், இந்த 2 வார கால போர் நிறுத்த ஒப்பந்தம் லெபனான் நாட்டிற்குப் பொருந்தாது என்றும், அங்குள்ள ஹிஸ்புல்லா அமைப்பினருக்கு எதிரான ராணுவத் தாக்குதல்கள் தடையின்றித் தொடரும் என்றும் இஸ்ரேல் அரசு திட்டவட்டமாகத் தெரிவித்துள்ளது.

Dailyhunt
Disclaimer: This content has not been generated, created or edited by Dailyhunt. Publisher: Seithisolai