Dailyhunt Logo
  • Light mode
    Follow system
    Dark mode
    • Play Story
    • App Story
"ட்ரோன் கேமரா மூலம் வெளிவரப் போகும் உண்மை!" ஏரியை விழுங்கிய விவகாரம். அமைச்சர் எ.வ.வேலு மீது இன்னும் FIR பதியப்படாததற்கான பகீர் பின்னணி.!!"

"ட்ரோன் கேமரா மூலம் வெளிவரப் போகும் உண்மை!" ஏரியை விழுங்கிய விவகாரம். அமைச்சர் எ.வ.வேலு மீது இன்னும் FIR பதியப்படாததற்கான பகீர் பின்னணி.!!"

மிழகத்தில் ஏரி முறைகேடு விவகாரத்தில் அமைச்சர் எ.வ.வேலு மீது இதுவரை முதல் தகவல் அறிக்கை பதிவு செய்யப்படாதது கடும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

முறைகேடு நடந்தபோது பதவியில் இருந்த வட்டாட்சியர் மோகன்ராமன் மற்றும் அதே துறை சார்ந்த அதிகாரிகள் மீது எந்த நடவடிக்கையும் எடுக்கப்படாமல் தொடர்ந்து பணியில் இருப்பது பல சந்தேகங்களை எழுப்புகிறது.

இந்தச் சம்பவத்தை உள்ளூர் அதிகாரிகள் மூடிமறைக்க முயல்வதாகத் தகவல்கள் வெளியாகி உள்ளன. எனவே, உடனடியாக லஞ்ச ஒழிப்புத் துறை இதில் தலையிட்டு முறையான எஃப்.ஐ.ஆர் பதிவு செய்ய வேண்டும் என்றும், அப்போது பணியில் இருந்த அனைத்து அதிகாரிகளையும் உடனடியாகப் பணி இடைநீக்கம் செய்ய வேண்டும் என்றும் கோரிக்கைகள் வலுத்து வருகின்றன.

உண்மையை வெளிக்கொண்டுவர இரண்டு தன்னிச்சையான குழுக்கள் மூலம் ட்ரோன் சர்வே நடத்தி, திருடப்பட்ட மண்ணின் அளவைத் துல்லியமாகக் கணக்கிட வேண்டும் என்றும் சமூக ஆர்வலர்கள் வலியுறுத்துகின்றனர்.

குறிப்பாக, திருடப்பட்ட மண் கொட்டப்பட்ட இடத்தின் அசல் தரை மட்டத்தில் இருந்து எத்தனை அடி உயரம், அகலம் மற்றும் நீளத்திற்கு மண் கொட்டப்பட்டுள்ளது என்பதைத் துல்லியமாக அளவிட வேண்டும்.

">

வரவிருக்கும் மழைக்காலத்திற்கு முன்பாக இந்த விசாரணைகளை விரைந்து முடிக்க வேண்டும் என்றும் பொதுமக்கள் மற்றும் ஆர்வலர்கள் தரப்பில் கோரிக்கைகள் எழுந்துள்ளன.

Dailyhunt
Disclaimer: This content has not been generated, created or edited by Dailyhunt. Publisher: Seithisolai