சேலம் மாவட்டத்தைச் சேர்ந்த சந்திரா (57) என்ற பெண், ஈரோட்டில் உள்ள தனது உறவினரைப் பார்த்துவிட்டு ஊர் திரும்புவதற்காக அரசு நகரப் பேருந்தில் பயணம் செய்துள்ளார்.
அவர் திண்டல் நோக்கிச் சென்ற பேருந்தில் ஏறியபோது, பயணிகளின் கூட்டம் அதிகமாக இருந்துள்ளது. இந்தச் சந்தர்ப்பத்தைப் பயன்படுத்திக்கொண்ட மர்ம நபர்கள், அவர் கழுத்தில் அணிந்திருந்த 5 பவுன் தங்கச் சங்கிலியை நைசாகத் திருடிச் சென்றுள்ளனர்.
பேருந்தில் இருந்து இறங்கிய பின்னரே தனது செயின் காணாமல் போனதைக் கண்டு சந்திரா அதிர்ச்சியடைந்தார். இது குறித்து அவர் அளித்த புகாரின் பேரில், சூரம்பட்டி போலீசார் வழக்குப் பதிவு செய்து பேருந்து நிறுத்தங்களில் உள்ள சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்து வருகின்றனர்.
பொது இடங்களிலும் பேருந்துகளிலும் பயணம் செய்யும்போது பொதுமக்கள் தங்கள் நகைகள் மற்றும் உடைமைகளில் கூடுதல் கவனத்துடன் இருக்க வேண்டும் என போலீசார் எச்சரித்துள்ளனர்.

