Dailyhunt Logo
  • Light mode
    Follow system
    Dark mode
    • Play Story
    • App Story
"எல்லாம் மறந்துட்டாங்களா.?" குஷ்பு மீது கடும் கோபத்தில் ராதாரவி.. கோவா செல்லத் தயாராக இருந்தும் ஏமாற்றம்.. திருமண அழைப்பிதழ் விவகாரத்தில் நடந்தது என்ன.??

"எல்லாம் மறந்துட்டாங்களா.?" குஷ்பு மீது கடும் கோபத்தில் ராதாரவி.. கோவா செல்லத் தயாராக இருந்தும் ஏமாற்றம்.. திருமண அழைப்பிதழ் விவகாரத்தில் நடந்தது என்ன.??

டிகை குஷ்புவின் மகள் அவந்திகாவின் திருமணம் சமீபத்தில் கோவாவில் மிக விமரிசையாக நடைபெற்றது. இந்தத் திருமணத்திற்காகப் பிரதமர் மோடி, முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உள்ளிட்ட முக்கிய அரசியல் தலைவர்கள் மற்றும் திரையுலகப் பிரபலங்களுக்கு குஷ்பு நேரில் சென்று அழைப்பிதழ் கொடுத்திருந்தார்.

த்ரிஷா, தமன்னா, சிரஞ்சீவி எனப் பல முன்னணி நட்சத்திரங்களும் இந்தத் திருமண விழாவில் கலந்துகொண்டு மணமக்களை வாழ்த்தினர். இந்த நிலையில், குஷ்புவின் வீட்டுத் திருமணத்திற்குத் தன்னை அழைக்காதது குறித்து நடிகர் ராதாரவி தனது அதிருப்தியை வெளிப்படுத்தியுள்ளார். இது குறித்து அவர் பேசுகையில், "நான் இதற்கு முன் அவர்களுக்குச் செய்த உதவிகளை எல்லாம் மறந்துவிட்டார்கள் போலிருக்கிறது.

இப்போது அவர்கள் வேற லெவலுக்குச் சென்றுவிட்டதாக நினைத்து, எனக்கு அழைப்பிதழ் கொடுக்காமல் விட்டிருக்கலாம். அரசியலில் அவர்கள் தேர்தலில் போட்டியிட்டபோது என் ஆதரவு கேட்டு வந்தார்கள்; சுந்தர்.சி போட்டியிட்டபோது கூட நான் வாழ்த்தி அனுப்பினேன். என்னை அழைத்திருந்தால் நிச்சயம் கோவா சென்றிருப்பேன்" என்று காட்டமாகக் கூறியுள்ளார்.

Dailyhunt
Disclaimer: This content has not been generated, created or edited by Dailyhunt. Publisher: Seithisolai