Dailyhunt Logo
  • Light mode
    Follow system
    Dark mode
    • Play Story
    • App Story
"எங்க மண்ணுல உங்களுக்கு இடமே இல்லை..!" பாகிஸ்தான் ராணுவத்தின் மீது பலூச் போராளிகள் நடத்திய ஓப்பன் அட்டாக்.. சீனாவுக்கு ஷி ஜின்பிங் கொடுத்த ஆதரவு..!!"

"எங்க மண்ணுல உங்களுக்கு இடமே இல்லை..!" பாகிஸ்தான் ராணுவத்தின் மீது பலூச் போராளிகள் நடத்திய ஓப்பன் அட்டாக்.. சீனாவுக்கு ஷி ஜின்பிங் கொடுத்த ஆதரவு..!!"

பாகிஸ்தான் பிரதமர் ஷாபாஸ் ஷெரீப் சீனாவுக்கு அரசுமுறைப் பயணம் மேற்கொண்டிருந்த போது, சீன அதிபர் ஷி ஜின்பிங் பாகிஸ்தானின் கருத்துக்கு ஆதரவாக ஆக்கிரமிப்பு காஷ்மீர் விவகாரத்தைக் கையில் எடுத்தார்.

மேலும், இரு நாடுகளும் இணைந்து சிஇபிசி (CPEC - சீனா-பாகிஸ்தான் பொருளாதார வழித்தடம்) திட்டத்தின் மூலம் ஆக்கிரமிப்பு காஷ்மீர் பகுதியில் தங்களது ஆதிக்கத்தை வலுப்படுத்த முயன்று வருகின்றன.

இந்த விவகாரத்தில் சீனா மற்றும் பாகிஸ்தான் நாடுகள் இணைந்து கூட்டு அறிக்கை வெளியிட்ட 24 மணி நேரத்திற்குள்ளாகவே, ஆக்கிரமிப்பு காஷ்மீர் பகுதியில் ஒரு அதிரடிச் சம்பவம் நடந்துள்ளது.

பலூச் லிபரேஷன் ஆர்மி அமைப்பைச் சேர்ந்த போராளிகள், அந்தப் பகுதியில் சென்றுகொண்டிருந்த பாகிஸ்தான் ராணுவ வாகனங்களின் மீது ஒரு பயங்கரமான தாக்குதலை நடத்தியுள்ளனர்.

பாகிஸ்தான் ராணுவத் படையினரைக் குறிவைத்து நடத்தப்பட்ட இந்தத் தாக்குதலில் சம்பவ இடத்திலேயே 8 பேர் உயிரிழந்தனர். மஸ்தூங் என்ற பகுதியில் பாகிஸ்தான் ராணுவத் காண்வாய் சென்றுகொண்டிருந்த போது, பலூச் போராளிகள் இந்தத் தாக்குதலை மிக அதிவேகமாக நடத்தினர்.

இதனால் பாகிஸ்தான் ராணுவ வீரர்கள் சுதாரித்துக் கொள்வதற்குள், அவர்களின் ஒரு டிரக் வாகனம் ஐஇடி வெடிகுண்டுத் தாக்குதலில் சிக்கிச் சிதறியது. காஷ்மீர் விவகாரத்தில் பாகிஸ்தானுக்கு சீனா ஆதரவளித்ததற்கு இந்தியா ஏற்கனவே தனது கடுமையான எதிர்ப்பைப் பதிவு செய்திருந்தது.

ஆனால், சீனாவின் ஆதரவு கிடைத்த சில மணி நேரங்களிலேயே பலூச் லிபரேஷன் ஆர்மி இந்த மெகா குண்டுவெடிப்பை நிகழ்த்தி இரு நாடுகளுக்கும் பெரிய அதிர்ச்சியைக் கொடுத்துள்ளது. சீனா எவ்வளவுதான் அறிக்கைகள் வெளியிட்டாலும், பலூசிஸ்தான் மண்ணில் பாகிஸ்தான் ராணுவத்திற்கும் சீனத் திட்டங்களுக்கும் இடம் கிடையாது என்று பலூச் போராளிகள் இதன் மூலம் எச்சரித்துள்ளனர்.

Dailyhunt
Disclaimer: This content has not been generated, created or edited by Dailyhunt. Publisher: Seithisolai