Dailyhunt Logo
  • Light mode
    Follow system
    Dark mode
    • Play Story
    • App Story
"எங்களைக் கேட்கல?.. எங்களுக்கு இதெல்லாம் வேணாம்!". டாஸ்மாக் 25% ஊதிய உயர்வுக்கு எதிராகக் கொதித்தெழுந்த சிஐடியூ. தமிழக அரசுக்கு அதிரடி கோரிக்கை..!!

"எங்களைக் கேட்கல?.. எங்களுக்கு இதெல்லாம் வேணாம்!". டாஸ்மாக் 25% ஊதிய உயர்வுக்கு எதிராகக் கொதித்தெழுந்த சிஐடியூ. தமிழக அரசுக்கு அதிரடி கோரிக்கை..!!

டாஸ்மாக் பணியாளர்களுக்குத் தமிழக அரசு அறிவித்துள்ள 25 விழுக்காடு ஊதிய உயர்வுக்குச் சிஐடியூ (CITU) தொழிற்சங்கம் தனது பலத்த எதிர்ப்பையும் கண்டனத்தையும் பதிவு செய்துள்ளது.

டாஸ்மாக் ஊழியர்கள் மாநில சம்மேளனம் வெளியிட்டுள்ள அறிக்கையில், தொழிலாளர்களின் பிரதிநிதிகளான தொழிற்சங்கங்களுடன் முறையான எந்தவொரு பேச்சுவார்த்தையையும் நடத்தாமல், அரசு தன்னிச்சையாக இந்த ஊதிய உயர்வை அறிவித்திருப்பது முற்றிலும் ஏற்புடையதல்ல என்று குற்றம் சாட்டியுள்ளது.

அரசின் இந்த ஒருதலைப்பட்சமான அறிவிப்பு, நீண்ட நாட்களாகக் கோரிக்கைகளை வலியுறுத்திப் போராடி வரும் டாஸ்மாக் ஊழியர்கள் மத்தியில் பெரும் ஏமாற்றத்தையும், கடுமையான விரக்தியையும் ஏற்படுத்தியுள்ளதாக அவர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர்.

எனவே, தற்போது அறிவிக்கப்பட்டுள்ள இந்தத் தொகுப்பூதிய உயர்வைத் தமிழக அரசு உடனடியாக மறுபரிசீலனை செய்ய வேண்டும் என்று அவர்கள் வலியுறுத்தியுள்ளனர்.

மேலும், அனைத்து தொழிற்சங்கங்களையும் அழைத்து முறையான பேச்சுவார்த்தை நடத்தி, டாஸ்மாக் ஊழியர்களின் அடிப்படைச் சம்பளத்துடன் கூடிய காலமுறை ஊதியத்தை முறைப்படி வழங்க அரசு முன்வர வேண்டும் என்றும் சிஐடியூ சம்மேளனம் திட்டவட்டமாகக் கோரியுள்ளது.

Dailyhunt
Disclaimer: This content has not been generated, created or edited by Dailyhunt. Publisher: Seithisolai