Dailyhunt
"என்னை தவெக-வில் சேர்த்துக்கோங்க விஜய் அண்ணா" வாழ்த்து மழையோடு கோரிக்கை வைத்த விஜயலட்சுமி..!!

"என்னை தவெக-வில் சேர்த்துக்கோங்க விஜய் அண்ணா" வாழ்த்து மழையோடு கோரிக்கை வைத்த விஜயலட்சுமி..!!

மிழக சட்டமன்றத் தேர்தலில் தமிழக வெற்றிக் கழகம் அபார வெற்றி பெற்றுள்ள நிலையில், நடிகை விஜயலட்சுமி வெளியிட்டுள்ள வீடியோ சமூக வலைதளங்களில் புயலைக் கிளப்பியுள்ளது.

அதில் பேசிய அவர், "விஜய் அண்ணாவுக்கு எனது மனமார்ந்த வாழ்த்துக்கள். மக்கள் தீர்ப்பே மகேசன் தீர்ப்பு, அதை நாம் அனைவரும் ஏற்றுக்கொண்டே ஆக வேண்டும்" என்று பெருமிதத்துடன் தெரிவித்துள்ளார். மேலும், தான் தற்போது சென்னையில் இல்லாததை சுட்டிக்காட்டிய அவர், "நான் மட்டும் இப்போது சென்னையில் இருந்திருந்தால், நேரில் சென்று விஜய் அண்ணாவைச் சந்தித்து வாழ்த்து சொல்லியிருப்பேன்" என உருக்கமாகப் பேசியுள்ளார்.

​வெறும் வாழ்த்துக்களோடு நிறுத்தாமல், "என்னையும் தமிழக வெற்றிக் கழகத்தில் இணைத்துக் கொள்ளுங்கள்; எனக்கும் தமிழக மக்களுக்குச் சேவை செய்ய அதிக ஆர்வம் இருக்கிறது" என்று அவர் விடுத்த வேண்டுகோள் தவெக தொண்டர்களிடையே விவாதத்தை ஏற்படுத்தியுள்ளது. தன்னை நம்பி வாக்களித்த மக்களுக்கு விஜய் அண்ணா நிச்சயம் நல்லது செய்ய வேண்டும் என்றும் அவர் அந்த வீடியோவில் கேட்டுக்கொண்டுள்ளார். ஏற்கனவே சீமான் உடனான மோதலில் அடிக்கடி செய்திகளில் அடிபட்ட விஜயலட்சுமி, இப்போது நேரடியாக விஜய்யின் கட்சியில் இணைய விருப்பம் தெரிவித்துள்ளதால் இந்த வீடியோ இணையத்தில் தீயாய் பரவி வருகிறது.

Dailyhunt
Disclaimer: This content has not been generated, created or edited by Dailyhunt. Publisher: Seithisolai