பெங்களூருவில் தனது 11 மாதக் குழந்தை உயிரிழந்த துக்கம் தாங்காமல், தாய் பிரதீபா (29) தற்கொலை செய்துகொண்ட சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
பிரதீபா வீட்டின் மாடிக்குச் சென்றிருந்த நேரத்தில், வீட்டில் விளையாடிக்கொண்டிருந்த குழந்தை எதிர்பாராதவிதமாக தண்ணீர் வாளியில் விழுந்து மூழ்கியது. பதறியடித்துக் குழந்தையை மீட்டபோதும், அது பரிதாபமாக உயிரிழந்தது.
தனது அலட்சியமே குழந்தையின் இறப்பிற்குக் காரணம் என்ற குற்ற உணர்ச்சியில் தவித்த பிரதீபா, தன் கணவரிடம் மன்னிப்பு கேட்டு உருக்கமான கடிதம் ஒன்றை எழுதி வைத்துவிட்டு தூக்கிட்டுத் தற்கொலை செய்துகொண்டார். ஒரு சிறிய கவனக்குறைவால் தாயும், குழந்தையும் அடுத்தடுத்து உயிரிழந்தது அந்தப் பகுதியையே சோகத்தில் ஆழ்த்தியுள்ளது. போலீஸார் கடிதத்தை மீட்டு விசாரணை நடத்தி வருகின்றனர்.

