சீனாவில் தற்போது வைரலாகி வரும் 'கிரையோ-காபி' அதன் விசித்திரமான தயாரிப்பு முறையால் அனைவரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளது.
சுமார் -80 டிகிரி செல்சியஸ் கடும் குளிர் வெப்பநிலையில் வைக்கப்படும் ஒரு விசேஷ கோப்பையில் இந்த காபி பரிமாறப்படுகிறது.
அந்தக் கோப்பை எவ்வளவு குளிராக இருக்கும் என்றால், பணியாளர்கள் அதைக் கைகளால் தொடாமல் இடுக்கி மூலமாகவே கையாளுகின்றனர். இந்த உறைநிலைக் கோப்பையில் சூடான காபியை ஊற்றும்போது, அது அடுத்த சில நொடிகளிலேயே குளிர்ந்து, ஐஸ்கிரீம் போன்ற கெட்டியான பதத்திற்கு மாறிவிடுகிறது.
இந்த அறிவியல் கலந்த சுவையை அனுபவிக்க ஒரு இந்தியப் பெண் சுமார் 325 ரூபாய் செலவிட்டு, அதற்கு 10-க்கு 8.5 மதிப்பெண்களையும் வழங்கியுள்ளார். சமூக ஊடகங்களில் இந்தக் காணொளி பெரும் விவாதத்தை ஏற்படுத்தியுள்ளது.
சிலர் இந்த வித்தியாசமான முயற்சியைப் பாராட்டினாலும், பலரும் இதன் பாதுகாப்பு குறித்துக் கவலை தெரிவிக்கின்றனர். குறிப்பாக, அவ்வளவு குளிர்ச்சியான கோப்பையில் வாய் வைத்துப் பருகும்போது உதடுகள் ஒட்டிக்கொள்ள வாய்ப்புள்ளதாகவும், இது ஆரோக்கியத்திற்குப் பாதிப்பை ஏற்படுத்துமா என்றும் கேள்விகள் எழுப்பப்படுகின்றன.
">
ஒரு சிலர் இதைப் வெறும் விலை உயர்ந்த விளம்பரத் தந்திரம் என்று விமர்சித்தாலும், காபி பிரியர்களிடையே இந்த 'ஐஸ் சாகசம்' ஒரு புதிய தேடலாகவே மாறியுள்ளது.

