Dailyhunt Logo
  • Light mode
    Follow system
    Dark mode
    • Play Story
    • App Story
"எப்போதும் உங்களுடன் இருப்பேன்" ஸ்டாலினைச் சந்தித்த ரஜினி.. உருக்கமான பின்னணி..!!

"எப்போதும் உங்களுடன் இருப்பேன்" ஸ்டாலினைச் சந்தித்த ரஜினி.. உருக்கமான பின்னணி..!!

மிழக சட்டமன்றத் தேர்தல் முடிவுகள் அரசியல் களத்தில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளன. ஆளுங்கட்சியான திமுக தோல்வியைத் தழுவியதுடன், யாரும் எதிர்பாராத விதமாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தனது சொந்தத் தொகுதியான கொளத்தூரிலேயே தோல்வியடைந்தார்.

இந்தச் சூழலில், கடந்த சில நாட்களாக நிலவி வரும் அரசியல் பரபரப்புகளுக்கு மத்தியில், சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் இன்று ஆழ்வார்பேட்டையில் உள்ள மு.க.ஸ்டாலின் இல்லத்திற்கு நேரில் சென்றார்.

​இந்தச் சந்திப்பின்போது, தோல்வியால் சோர்வடைந்திருந்த ஸ்டாலினுக்கு ரஜினிகாந்த் தனது மனமார்ந்த ஆறுதலைத் தெரிவித்துக்கொண்டார். "வெற்றிபெறும் நேரத்தில் மட்டுமல்ல, இது போன்ற இக்கட்டான சூழலிலும் உங்கள் நண்பனாக நான் எப்போதும் உங்களுடன் இருப்பேன்" என்று ரஜினி கூறியதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன. பல தசாப்தங்களாகத் தொடரும் இவர்களது நட்பு, அரசியலுக்கு அப்பாற்பட்டு இக்கட்டான நேரத்தில் வெளிப்பட்டிருப்பது அரசியல் விமர்சகர்களிடையே நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Dailyhunt
Disclaimer: This content has not been generated, created or edited by Dailyhunt. Publisher: Seithisolai