Dailyhunt
"எரியும் பூமி.. எகிறும் உயிரிழப்புகள்!". உலக சுகாதார அமைப்பு வெளியிட்ட அதிரடி எச்சரிக்கை..!!!!

"எரியும் பூமி.. எகிறும் உயிரிழப்புகள்!". உலக சுகாதார அமைப்பு வெளியிட்ட அதிரடி எச்சரிக்கை..!!!!

காலநிலை மாற்றத்தின் கோரத்தாண்டவம் குறித்து உலக சுகாதார அமைப்பு தற்போது ஒரு அதிர்ச்சி தகவலை வெளியிட்டுள்ளது.

அதன்படி, ஊட்டச்சத்து குறைபாடு, மலேரியா மற்றும் அதீத வெப்ப அழுத்தம் காரணமாக வரும் 2030 முதல் 2050-ஆம் ஆண்டு வரை ஆண்டுக்கு சராசரியாக 2.5 லட்சம் கூடுதல் உயிரிழப்புகள் ஏற்பட வாய்ப்புள்ளதாக எச்சரிக்கப்பட்டுள்ளது.

நிலைமை இப்படியே நீடித்தால், இயற்கை பேரிடர்கள் மற்றும் கடுமையான வெப்ப உயர்வால் 2050-க்குள் இந்த உயிரிழப்பு எண்ணிக்கை ஆண்டுக்கு 7 லட்சமாக உயரக்கூடும் என அந்தத் தகவல் தெரிவிக்கிறது.

ஒட்டுமொத்த உலகையும் அச்சுறுத்தி வரும் இந்த வெப்ப உயர்வு, எதிர்காலத்தில் மனித இனத்திற்கு மிகப்பெரிய சவாலாக மாறப்போகிறது என்பதையே இந்த புள்ளிவிவரங்கள் உணர்த்துகின்றன.

Dailyhunt
Disclaimer: This content has not been generated, created or edited by Dailyhunt. Publisher: Seithisolai