Dailyhunt Logo
  • Light mode
    Follow system
    Dark mode
    • Play Story
    • App Story
ஹாலிவுட் நடிகைக்கு வந்த மிரட்டல் ஆடை.! பாரிஸிலிருந்து லண்டனுக்கு தனி விமானத்தில் பறந்த 'ரெட் கார்பெட்' காஸ்டியூம்.!!

ஹாலிவுட் நடிகைக்கு வந்த மிரட்டல் ஆடை.! பாரிஸிலிருந்து லண்டனுக்கு தனி விமானத்தில் பறந்த 'ரெட் கார்பெட்' காஸ்டியூம்.!!

பிரபல ஹாலிவுட் இயக்குனர் கிறிஸ்டோபர் நோலனின் புதிய திரைப்படமான 'தி ஒடிஸி' படத்தின் லண்டன் பிரீமியர் காட்சி அண்மையில் நடைபெற்றது.

உலகமே எதிர்பார்த்த இந்த ரெட் கார்பெட் நிகழ்வில் கலந்துகொண்ட பிரபல ஹாலிவுட் நடிகை ஜெண்டயா அணிந்திருந்த ஆடை, ஒட்டுமொத்த சர்வதேசத் திரையுலகையும் ஃபேஷன் உலகையும் வியப்பில் ஆழ்த்தியுள்ளது. பிரான்ஸ் நாட்டின் நடைபெற்ற ஷியாபரெல்லி பிராண்டின் 'ஹட் கோடூர்' ஃபேஷன் ஷோவில் மாடல்கள் அணிந்து அறிமுகப்படுத்திய சில மணி நேரங்களிலேயே, அந்த ஆடம்பர ஆடை பாரிஸிலிருந்து லண்டனுக்குத் தனி விமானம் மூலம் பிரத்தியேகமாகப் பறந்து வந்துள்ளது.

நடிகை ஜெண்டயாவின் ஆடை வடிவமைப்பாளரான லா ரோச், பாரிஸ் ஃபேஷன் ஷோ முடிந்தவுடன் அங்கிருந்த மாடலிடமிருந்து அந்த ஆடையைப் பெற்று, லண்டனில் காத்திருந்த ஜெண்டயாவுக்காகத் தனி விமானத்தில் அவசரமாகக் கொண்டு வந்து சேர்த்ததாகத் தெரிவித்துள்ளார். வெள்ளை நிற பளபளப்பான போர்சிலைன் சிலிக்கான் வடிவமைப்பு, பின்புறம் கயிறுகளால் பிணைக்கப்பட்ட அமைப்பு மற்றும் கண்ணாடிகள் பதிக்கப்பட்ட ஓரங்கள் எனப் பல சிறப்பம்சங்களைக் கொண்ட இந்த ஆடையின் ஸ்கர்ட் பகுதிக்கு உள்ளே, விளக்குகள் எரியும் படியான தனித்துவமான தொழில்நுட்பமும் இடம்பெற்றிருந்தது.

வெள்ளி பித்தளை காதணிகள் மற்றும் வளைந்த ஹீல்ஸ் கொண்ட கண்ணாடி தோல் செருப்புகளுடன் ஜெண்டயா இந்த உடையில் ரெட் கார்பெட்டில் வலம் வந்தபோது, அங்கு கூடியிருந்த புகைப்படக் கலைஞர்களின் கேமரா கண்கள் அனைத்தும் அவர் பக்கமே திரும்பின. இதற்கு முந்தைய மாதங்களில் நடைபெற்ற ஸ்பைடர் மேன் பட விளம்பர நிகழ்வுகளில் மிகவும் எளிமையான ஆடைகளில் தோன்றிய ஜெண்டயா, தற்போது 'தி ஒடிஸி' படத்தின் பிரீமியர் காட்சிக்காகத் தனி விமானம் மூலம் ஆடையை வரவழைத்து மிக பிரம்மாண்டமான முறையில் ரெட் கார்பெட்டை அலங்கரித்துள்ளது சர்வதேச அளவில் பெரும் பேசுபொருளாக மாறியுள்ளது.

Dailyhunt
Disclaimer: This content has not been generated, created or edited by Dailyhunt. Publisher: Seithisolai