ஈரான் மற்றும் அமெரிக்கா இடையிலான போர் காரணமாக ஹோமுஸ் நீரிணைப்புப் பகுதி முழுமையாக முடக்கப்பட்டுள்ள நிலையில் சர்வதேசக் கப்பல் போக்குவரத்து பெரும் பாதிப்பைச் சந்தித்துள்ளது.
உலக எரிசக்தி விநியோகத்தில் 30 சதவீதப் பங்கைக் கொண்டுள்ள ஹோமுஸ் மற்றும் பாப் அல் மாண்டேப் கடல் வழிகளில் நிலவும் போர் பதற்றம் காரணமாகக் கப்பல் நிறுவனங்கள் தற்போது நன்னம்பிக்கை முனை என்ற புதிய கடல் வழியைத் தேர்வு செய்துள்ளன.
அட்லாண்டிக் மற்றும் இந்தியப் பெருங்கடல்களை இணைக்கும் இந்த வழித்தடம் வழியாக நாளொன்றுக்குச் சராசரியாக நூற்று ஐம்பது சரக்குக் கப்பல்கள் பயணம் செய்வதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன. ஈரான் மற்றும் அதன் ஆதரவு அமைப்புகளின் அச்சுறுத்தல் இன்றி மத்திய கிழக்கு மற்றும் ஆசியா உள்ளிட்ட நாடுகளுக்குச் செல்ல இந்த வழித்தடம் பாதுகாப்பானதாகக் கருதப்படுகிறது.
கடந்த 2025ம் ஆண்டு ஜூன் மாதம் தொடங்கிய ஈரான் மற்றும் அமெரிக்கா இடையிலான மோதலால் தற்பொழுது தென்னாப்பிரிக்க வழித்தடத்தில் கப்பல் போக்குவரத்து முப்பது சதவீதம் அதிகரித்துள்ளது. 1998ம் ஆண்டில் வாஸ்கோடா காமா இந்தியாவிற்கு வருவதற்குப் பயன்படுத்திய இதே நன்னம்பிக்கை முனை வழித்தடம் தற்பொழுது உலக நாடுகளுக்குப் புகலிடமாக மாறியுள்ளது.
இருப்பினும் இந்த நீண்ட தூரப் பயணம் காரணமாகக் கப்பல்களுக்கான எரிபொருள் மற்றும் துறைமுகக் கட்டணங்கள் 30 முதல் 70 சதவீதம் வரை உயர வாய்ப்புள்ளதாகப் பொருளாதார நிபுணர்கள் எச்சரித்துள்ளனர். ஹோமுஸ் நீரிணைப்பைக் கைப்பற்றாமலேயே இந்தப் போரை நிறுத்த முடியும் என்று அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் நம்பிக்கை தெரிவித்துள்ள நிலையில் விரைவில் சுமுகத் தீர்வு கிடைக்கும் என உலக நாடுகள் எதிர்பார்த்துக் காத்திருக்கின்றன.

