Dailyhunt
ஹெலிகாப்டரிலிருந்து ஹாயாக குதித்த ராணுவ நாய்.. 1000 அடி உயரத்தில் 'பாராசூட்' சாகசம் - வைரல் வீடியோ..!!

ஹெலிகாப்டரிலிருந்து ஹாயாக குதித்த ராணுவ நாய்.. 1000 அடி உயரத்தில் 'பாராசூட்' சாகசம் - வைரல் வீடியோ..!!

நாட்டின் பாதுகாப்பிற்காக மனிதர்களைப் போலவே நாய்களும் ராணுவத்தில் முக்கிய பங்காற்றுகின்றன. அந்த வகையில், கஜகஸ்தானில் 'அரிஷா' என்ற ராணுவ நாய், தனது பயிற்சியாளருடன் சேர்ந்து சுமார் ஆயிரம் அடி உயரத்திலுள்ள ஹெலிகாப்டரிலிருந்து பாராசூட் மூலம் குதிக்கும் காட்சி இணையதளங்களை அதிர வைத்துள்ளது.

பொதுவாகவே நாய்கள் மிகவும் விசுவாசமானவை, ஆனால் இந்த 'அரிஷா' விசுவாசத்தைத் தாண்டி, ஒரு தேர்ந்த ராணுவ வீரரைப் போலவே சற்றும் பயமின்றி ஆகாயத்தில் பறந்து சாதனை படைத்துள்ளது.

​ஸ்பெஷல் போர்ஸ் படையில் உள்ள நாய்களுக்கு மிகக் கடினமான சூழல்களைக் கையாள பயிற்சி அளிக்கப்படும். அதன் ஒரு பகுதியாகவே இந்த பாராசூட் பயிற்சியும் வழங்கப்பட்டுள்ளது. இன்ஸ்டாகிராமில் வைரலாகும் இந்த வீடியோவைப் பார்த்த நெட்டிசன்கள், "அந்த நாயின் தன்னம்பிக்கையைப் பாருங்கள், ஏதோ தினமும் வேலைக்குச் செல்வது போல எவ்வளவு ரிலாக்ஸாகக் குதிக்கிறது!" என வியந்து பாராட்டி வருகின்றனர். தன் உயிருக்கு ஆபத்து வரும் எனத் தெரிந்தும் நாட்டுப் பணிக்காகத் துணிச்சலுடன் செயல்படும் இந்த வாயில்லா ஜீவனின் வீரம் பலரையும் நெகிழ வைத்துள்ளது.

Dailyhunt
Disclaimer: This content has not been generated, created or edited by Dailyhunt. Publisher: Seithisolai