Dailyhunt Logo
  • Light mode
    Follow system
    Dark mode
    • Play Story
    • App Story
"இனி இவரை யாராலும் தொட முடியாது..!" - பக்ரீத் பண்டிகையில் டொனால்ட் டிரம்புக்கு நடந்த 'அந்த' அதிசயம்.. உலகையே திரும்பிப் பார்க்க வைத்த 'பகீர்' பின்னணி..!!"

"இனி இவரை யாராலும் தொட முடியாது..!" - பக்ரீத் பண்டிகையில் டொனால்ட் டிரம்புக்கு நடந்த 'அந்த' அதிசயம்.. உலகையே திரும்பிப் பார்க்க வைத்த 'பகீர்' பின்னணி..!!"

ங்கதேசத்தில் அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் போன்று தோற்றமளிக்கும் எருமை மாடு ஒன்று இணையத்தில் பயங்கர வைரலாகி வருகிறது.

பக்ரீத் பண்டிகையை முன்னிட்டு பலியிடுவதற்காக வளர்க்கப்பட்ட இந்த எருமை மாடு சுமார் 700 கிலோ எடை கொண்டது.

இதன் நெற்றியில் வெள்ளை நிறத் திட்டும், தலையின் மேல் பகுதியில் அச்சு அசல் டொனால்ட் டிரம்பின் சிகை அலங்காரத்தை ஒத்த மஞ்சள் கலந்த வெள்ளை நிற முடியும் உள்ளதுதான் அனைவரையும் கவர்ந்துள்ளது.

இதனால் ஈர்க்கப்பட்ட நெட்டிசன்கள் இதற்கு 'டொனால்ட் டிரம்ப் எருமை' என்று பெயரிட்டு, அது தொடர்பான வீடியோக்களையும் புகைப்படங்களையும் சமூக வலைதளங்களில் லட்சக்கணக்கில் பகிர்ந்து வைரலாக்கி வருகின்றனர்.

இந்த எருமை மாட்டிற்குப் பொதுமக்கள் மத்தியில் கிடைத்த பெரும் வரவேற்பைக் கருத்தில் கொண்டு, இதனைப் பலியிடக் கூடாது என்று வங்கதேச அரசு அதிகாரிகள் அதிரடி முடிவு எடுத்துள்ளனர்.

உடனடியாக அதன் உரிமையாளரான ஜியா உத்தீன் மிருதா என்பவரிடமிருந்து அந்த எருமை மாட்டை அரசே விலைக்கு வாங்கி, டாக்காவில் உள்ள வங்காளதேச தேசிய மிருகக்காட்சிசாலைக்கு பாதுகாப்பாகக் கொண்டு சேர்த்துள்ளது.

சுவாரசியமாக, இதே பண்ணையில் உள்ள சுமார் 750 கிலோ எடையுள்ள மற்றொரு எருமை மாடும் மக்களின் கவனத்தை ஈர்த்துள்ளது; அதற்கு இஸ்ரேல் பிரதமர் 'பெஞ்சமின் நேதன்யாகு' என்று பெயரிடப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

Dailyhunt
Disclaimer: This content has not been generated, created or edited by Dailyhunt. Publisher: Seithisolai