இயக்குநர் விக்னேஷ் சிவன், நடிகர் தனுஷ் உடனான தனது நட்பு முறிந்தது குறித்து முதல்முறையாக மனம் திறந்து உருக்கமான கருத்துக்களைப் பகிர்ந்துள்ளார்.
தனுஷ் தயாரிப்பில் உருவான 'நானும் ரவுடிதான்' திரைப்படம் மூலம் இயக்குநராகத் தடம் பதித்த விக்னேஷ் சிவன், இன்று தான் இருக்கும் நிலைக்கு தனுஷ் தான் முக்கிய காரணம் என்பதை நன்றியுடன் நினைவுகூர்ந்துள்ளார்.
மேலும் ஒரு நடிகராகத் தாண்டி அவரைத் தான் எப்போதும் உயரிய இடத்தில் வைத்திருப்பதாகவும், அவருடனான நல்லுறவை இழந்தது தனது வாழ்வின் மிகப்பெரிய பலவீனமாகவும், இழப்பாகவும் கருதுவதாக அவர் வேதனையுடன் தெரிவித்துள்ளார்.
இதனால் கடந்த சில காலங்களாக நயன்தாரா - தனுஷ் இடையே நிலவி வந்த சட்ட ரீதியான மோதல்களால் இவர்களது நட்பு விரிசலடைந்த நிலையில், விக்னேஷ் சிவனின் இந்த சமீபத்திய பேச்சு திரையுலகில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இந்நிலையில் ஏதோ ஒரு சூழலில் தான் செய்த தவறுதான் இந்த நட்பு முறிவுக்குக் காரணமோ என்று வருத்தம் தெரிவித்துள்ள விக்னேஷ் சிவன், தனுஷின் பங்களிப்பை எப்போதும் மறக்க முடியாது எனக் கூறியுள்ளார். இழந்த நட்பை மீண்டும் பெறுவதற்கான ஒரு ஏக்கமும், அதே சமயம் தனுஷ் மீதான மரியாதையும் அவரது வார்த்தைகளில் வெளிப்பட்டுள்ளது.

