Dailyhunt
"இன்னைக்கும் இல்லையா.. நீதிக்காக தொடரும் காத்திருப்பு" சாத்தான்குளம் தந்தை-மகன் உயிரிழந்த விவகாரம்.. அடுத்த வாரத்திற்கு தள்ளிப்போன தீர்ப்பு..!!

"இன்னைக்கும் இல்லையா.. நீதிக்காக தொடரும் காத்திருப்பு" சாத்தான்குளம் தந்தை-மகன் உயிரிழந்த விவகாரம்.. அடுத்த வாரத்திற்கு தள்ளிப்போன தீர்ப்பு..!!

தூத்துக்குடி மாவட்டம் சாத்தான்குளத்தைச் சேர்ந்த தந்தை ஜெயராஜ் மற்றும் மகன் பென்னிக்ஸ் ஆகியோர் கடந்த 2020-ஆம் ஆண்டு போலீஸ் விசாரணையின் போது கொடூரமான முறையில் தாக்கப்பட்டதால் உயிரிழந்தனர்.

உலகையே உலுக்கிய இந்தச் சம்பவத்தில் 9 போலீஸார் கைது செய்யப்பட்டு, தற்போது மதுரை மத்திய சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர்.

​இந்த முக்கிய வழக்கில் குற்றவாளிகளுக்கான தண்டனை விவரங்கள் இன்று (ஏப்ரல் 2) அறிவிக்கப்படும் என்று அனைவரும் ஆவலுடன் காத்திருந்தனர். ஆனால், கடைசி நேரத்தில் இந்த வழக்கின் தண்டனை விவரத்தை வரும் திங்கட்கிழமை (ஏப்ரல் 6) அறிவிப்பதாக மதுரை நீதிமன்றம் அதிரடியாக உத்தரவிட்டுள்ளது. இதனால் நீதி தேவதை திங்கட்கிழமை தான் தீர்ப்பை வழங்குவாள் எனப் பொதுமக்கள் எதிர்பார்த்துக் காத்திருக்கின்றனர்.

Dailyhunt
Disclaimer: This content has not been generated, created or edited by Dailyhunt. Publisher: Seithisolai