ஹைதராபாத்தின் ஜூப்ளி ஹில்ஸ் பகுதியில், சொகுசு வாழ்க்கை வாழ்வது போல இன்ஸ்டாகிராமில் ரீல்ஸ் வெளியிட்டு, பெண்களை வலையில் வீழ்த்தி பாலியல் அத்துமீறல் மற்றும் மிரட்டி பணம் பறிப்பில் ஈடுபட்ட கும்பலை போலீசார் கூண்டோடு பிடித்துள்ளனர்.
இந்த மோசடி கும்பலின் தலைவன் அர்ஜுன், அவனது சகோதரன் மற்றும் நான்கு நண்பர்கள் ஏற்கனவே கைதான நிலையில், தற்போது இவர்களுக்குத் துணையாக இருந்த அர்ஜுனின் தாய் மற்றும் தாய்மாமனும் அதிரடியாகக் கைது செய்யப்பட்டுள்ளனர்.
இன்ஸ்டாகிராமில் விலை உயர்ந்த கார்கள், ஆடம்பர பார்ட்டிகள் என 'ரிச் கிட்ஸ்' போலக் காட்டி, வசதியான வீட்டுப் பெண்களைக் குறிவைத்து இந்தப் பயங்கரத்தை அரங்கேற்றியுள்ளனர்.
முதலில் நட்பாகப் பழகி, அவர்களைத் தனிமைக்கு அழைத்துச் சென்று பாலியல் வன்கொடுமை செய்ததோடு, அதனை ரகசியமாக வீடியோவும் எடுத்துள்ளனர்.
அந்த வீடியோக்களைக் காட்டி மிரட்டி, பாதிக்கப்பட்ட பெண்களிடம் இருந்து பல லட்சம் ரூபாயை இந்தக் கும்பல் பறித்துள்ளது. 10-க்கும் மேற்பட்டோர் அடங்கிய இந்த நெட்வொர்க்கில் அர்ஜுனின் குடும்பமே பின்னணியில் இருந்து உதவியிருப்பது விசாரணையில் தெரியவந்துள்ளது.
சமூக வலைதளங்களில் அறிமுகம் இல்லாத நபர்களிடம் பழகும் போது மிகுந்த எச்சரிக்கையுடன் இருக்குமாறு காவல்துறை பொதுமக்களை எச்சரித்துள்ளது.

