Dailyhunt
இந்தியா முழுக்க 'மெகா' ட்விஸ்ட்! - மம்தா கோட்டையைப் பிடித்த பாஜக.. தமிழகத்தில் திமுக, அதிமுக-வை ஓரம் கட்டிய விஜய்!  - இன்னைக்கு ஃபுல்லா சம்பவங்கள் தான் போங்க..!!!

இந்தியா முழுக்க 'மெகா' ட்விஸ்ட்! - மம்தா கோட்டையைப் பிடித்த பாஜக.. தமிழகத்தில் திமுக, அதிமுக-வை ஓரம் கட்டிய விஜய்! - இன்னைக்கு ஃபுல்லா சம்பவங்கள் தான் போங்க..!!!

2026 சட்டமன்றத் தேர்தல் முடிவுகள் இந்திய அரசியலையே தலைகீழாகப் புரட்டிப் போட்டுள்ளன. தமிழகத்தில் "தளபதி" விஜய்யின் தமிழக வெற்றிக் கழகம் 110 இடங்களில் முன்னிலை பெற்று, பல தசாப்த கால திமுக-அதிமுக ஏகபோக ஆட்சியை உடைத்து சரித்திரம் படைத்துள்ளது;

ஆளுங்கட்சியான திமுக 57 இடங்களுடன் மூன்றாவது இடத்திற்குத் தள்ளப்பட்டுள்ளது அறிவாலய வட்டாரத்தைப் பேரதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. அதே சமயம், மேற்கு வங்கத்தில் மம்தா பானர்ஜியின் கோட்டையைத் தகர்த்து 193 இடங்களில் பாஜக அசுர பலத்துடன் முன்னிலை வகிக்கிறது; இதுகுறித்து பேசிய சுவேந்து அதிகாரி, "படித்த மக்களும் இந்துக்களும் மம்தாவை நிராகரித்துவிட்டனர், 180-க்கும் மேற்பட்ட இடங்களில் வென்று ஆட்சி அமைப்போம்" என அதிரடி காட்டியுள்ளார்.

அண்டை மாநிலமான கேரளாவில் 10 ஆண்டுகால இடதுசாரி ஆட்சியை வீழ்த்தி, 95 இடங்களுடன் காங்கிரஸ் தலைமையிலான UDF மெகா வெற்றியை நோக்கி முன்னேறி வருகிறது. அசாமில் ஹிமந்த பிஸ்வா சர்மா தலைமையிலான பாஜக 98 இடங்களுடன் ஹாட்ரிக் வெற்றியை உறுதி செய்துள்ள நிலையில், புதுச்சேரியிலும் 16 இடங்களுடன் NDA கூட்டணி ஆட்சியைக் கைப்பற்றியுள்ளது.

தமிழகத்தில் விஸ்வரூபம் எடுத்துள்ள விஜய் இன்னும் பொதுவெளியில் தோன்றாவிட்டாலும், தவெக-வின் இந்த அசுர வளர்ச்சி தேசிய அரசியலையே உற்றுநோக்க வைத்துள்ளது. ஐந்து மாநிலத் தேர்தல் முடிவுகளும் காங்கிரஸ் மற்றும் இடதுசாரிகளுக்குப் பலத்த அடி கொடுத்திருக்கும் நிலையில், காவி மற்றும் தவெக-வின் வெற்றிக் கொண்டாட்டங்கள் நாடு முழுவதும் களைகட்டியுள்ளன.

Dailyhunt
Disclaimer: This content has not been generated, created or edited by Dailyhunt. Publisher: Seithisolai