Dailyhunt
இந்தியாவில் அதிரடியாக மாறும் திருமண பந்தம். கிளிடென் செயலியில் இணைந்த 40 லட்சம் பேர். அதிர வைக்கும் புதிய தகவல்கள்..!!!

இந்தியாவில் அதிரடியாக மாறும் திருமண பந்தம். கிளிடென் செயலியில் இணைந்த 40 லட்சம் பேர். அதிர வைக்கும் புதிய தகவல்கள்..!!!

ந்தியாவில் திருமண உறவுக்கு வெளியிலான உறவுகளை ஊக்குவிக்கும் கிளிடென் செயலி தற்பொழுது நாற்பது லட்சம் பயனர்களைக் கடந்து புதிய மைல்கல்லை எட்டியுள்ளது.

கலாச்சார ரீதியாகத் திருமணத்தைப் புனிதமாகக் கருதும் இந்தியச் சமூகத்தில் டிஜிட்டல் தளங்கள் வாயிலாக இத்தகைய மாற்றங்கள் சத்தமில்லாமல் நடந்து வருவது பெரும் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.

இந்தச் செயலியில் கடந்த இரண்டு ஆண்டுகளில் பெண் பயனர்களின் பங்கேற்பு 148 சதவீதம் அதிகரித்துள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன. நீதிமன்றங்கள் இத்தகைய உறவுகளைத் திருமணம் கடந்த உறவாகவே பார்க்கின்றன என்பதும் பதினெட்டு வயது பூர்த்தியான ஆணும் பெண்ணும் பரஸ்பர சம்மதத்துடன் உறவில் இருப்பதில் சட்டப்படி தவறில்லை என்பதும் குறிப்பிடத்தக்கது.

பெங்களூரு மற்றும் ஹைதராபாத் போன்ற நகரங்கள் இதில் முன்னிலையில் உள்ள நிலையில் சென்னை மற்றும் கோவை போன்ற இடங்களிலும் இதன் தாக்கம் அதிகரித்து வருகிறது. தற்போதைய காலகட்டத்தில் ஐடி மற்றும் கார்ப்பரேட் நிறுவனங்களில் பணிபுரியும் தம்பதியினரிடையே நிலவும் பணி அழுத்தம் மற்றும் நேரமின்மை காரணமாக அவர்களுக்குள் ஒருவித இடைவெளி உருவாகிறது.

குறிப்பாக மகிழ்ச்சியான திருமண வாழ்க்கையில் இருப்பதாகக் கூறுபவர்களில் கூட ஐம்பத்தியோரு சதவீதம் பேர் தங்கள் துணையுடன் உணர்ச்சி ரீதியான பிணைப்பு இல்லை என்று தெரிவித்துள்ளனர். இன்றைய பெண்கள் பொருளாதார ரீதியாகத் தற்சார்பு கொண்டவர்களாக இருப்பதால் சமூகக் கட்டுப்பாடுகளை விடத் தங்களின் மகிழ்ச்சிக்கே முக்கியத்துவம் கொடுக்கத் தொடங்கியுள்ளனர்.

ஒரு காலத்தில் ஆண்கள் மட்டுமே இத்தகைய தவறுகளைச் செய்த நிலை மாறி தற்பொழுது பெண்களும் சம அளவில் இதில் ஈடுபடுவது இந்தியத் திருமண அமைப்பின் பாரம்பரியக் கட்டமைப்பில் ஏற்பட்டுள்ள மாற்றத்தை உறுதிப்படுத்துகிறது.

Dailyhunt
Disclaimer: This content has not been generated, created or edited by Dailyhunt. Publisher: Seithisolai