அமெரிக்காவின் பொருளாதாரத் தடையில் உள்ள 'பிங் ஷுன்' என்ற கப்பல், ஈரானிலிருந்து 6 லட்சம் பீப்பாய் கச்சா எண்ணெயுடன் இந்தியாவுக்கு வரவிருந்தது.
திட்டமிட்டபடி இந்தக் கப்பல் இன்று சனிக்கிழமை குஜராத்தின் வாடினார் துறைமுகத்திற்கு வந்தடைந்திருக்க வேண்டும்.
ஆனால், கடைசி நேரத்தில் இந்தக் கப்பல் தனது பாதையை மாற்றி சீனாவின் டாங்யிங் துறைமுகத்தை நோக்கிச் சென்று கொண்டிருப்பதாகக் கப்பல் கண்காணிப்பு நிறுவனமான கெப்ளர் தெரிவித்துள்ளது.
சுமார் 600 கோடி ரூபாய் மதிப்புள்ள இந்த எண்ணெய்க்கு, ஈரான் விற்பனையாளர்கள் முன்கூட்டியே பணம் செலுத்துமாறு நிபந்தனை விதித்ததே இந்த மாற்றத்திற்குக் காரணம் என்று கூறப்படுகிறது. வழக்கமாக கச்சா எண்ணெய் வாங்கிய பிறகு 30 முதல் 60 நாட்கள் கழித்தே பணம் செலுத்தப்படும் நடைமுறை உள்ளது.
ஆனால், 2025-ம் ஆண்டு இந்தக் கப்பல் மீது அமெரிக்கா விதித்த தடையால் ஏற்பட்ட சிக்கல்கள் காரணமாக, இந்த விநியோகம் சீனாவுக்குத் திருப்பப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

