2026-ஆம் ஆண்டுக்கான ஐபிஎல் கிரிக்கெட் தொடர் கடந்த மாதம் 28-ஆம் தேதி தொடங்கி விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.
இதற்கிடையில், தமிழகத்தில் சட்டப்பேரவைத் தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ளதால், பாதுகாப்பு மற்றும் நிர்வாகக் காரணங்களுக்காகச் சென்னையில் நடைபெறும் ஐபிஎல் போட்டிகளைத் தள்ளி வைக்க வேண்டும் எனப் பிரபாகரன் என்பவர் சென்னை உயர் நீதிமன்றத்தில் பொதுநல வழக்குத் தொடர்ந்தார்.
இந்த மனு இன்று விசாரணைக்கு வந்தபோது, வழக்கை விசாரித்த நீதிபதிகள் மனுதாரருக்குச் சரமாரி கேள்விகளை எழுப்பினர். "ஐபிஎல் போட்டிகளை நடத்துவதற்குச் சட்டத்தில் எங்கும் தடை இல்லாதபோது, நீதிமன்றம் தலையிட்டுப் போட்டிகளை எப்படி நிறுத்த முடியும்?" என்று நீதிபதிகள் கேள்வி எழுப்பினர். இதன் மூலம் சென்னையில் திட்டமிட்டபடி ஐபிஎல் போட்டிகள் நடைபெறுவது உறுதியாகியுள்ளது.

