Dailyhunt Logo
  • Light mode
    Follow system
    Dark mode
    • Play Story
    • App Story
"இப்படியும் ஒரு அமைச்சரா.."  சொன்னதைச் செய்துகாட்டினார்..!   தந்தைக்காக இரவு முழுவதும் அரசு மருத்துவமனையில் தங்கியிருந்தார்..!!

"இப்படியும் ஒரு அமைச்சரா.." சொன்னதைச் செய்துகாட்டினார்..! தந்தைக்காக இரவு முழுவதும் அரசு மருத்துவமனையில் தங்கியிருந்தார்..!!

"அமைச்சருக்கே இந்த நிலைமையா? இல்லை.. இல்லை.. இதுதான் உண்மையான மக்கள் சேவை!" என்று ஒட்டுமொத்த தமிழகமும் நெஞ்சாரப் பாராட்டும் வகையில், ஒரு நெகிழ்ச்சியான மற்றும் சம்பவம் நெல்லை அரசு மருத்துவமனையில் அரங்கேறியுள்ளது.

தனது தந்தைக்கு உடல்நலக் குறைவு ஏற்பட்ட உடனே, எந்தவொரு பந்தாவும் இல்லாமல், தமிழக அரசின் அறிவிப்பை அப்படியே பின்பற்றி அவரை நெல்லை அரசு பொது மருத்துவமனையிலேயே சிகிச்சைக்காக அனுமதித்துள்ளார் சிறு, குறு தொழில்துறை அமைச்சர் மதன் ராஜா! அதுமட்டுமில்லாமல், ஒரு சாதாரண மகனாக இரவு முழுவதும் மருத்துவமனையிலேயே தங்கியிருந்து தன் தந்தையைக் கண் இமைக்காமல் கவனித்துக் கொண்ட அமைச்சரின் இந்தச் செயல், நெல்லை மக்கள் மத்தியிலும் சமூக வலைத்தளங்களிலும் காட்டுத்தீயாய் பரவி வருகிறது.

"அரசு மருத்துவமனைகள் தரம் உயர்ந்துள்ளது" என்ற அரசின் கூற்றுக்குத் தானே முன்னுதாரணமாக மாறி, சாமானிய மக்களோடு மக்களாக நின்று அமைச்சர் காட்டிய இந்த எளிமை, கோட்டை வட்டாரம் தாண்டி ஒட்டுமொத்த பொதுமக்களின் இதயங்களையும் வென்றுஉள்ளது.

Dailyhunt
Disclaimer: This content has not been generated, created or edited by Dailyhunt. Publisher: Seithisolai