மரணம் என்பது வாழ்க்கையின் முடிவா அல்லது மற்றொரு உலகத்திற்கான நுழைவாயிலா? மெக்ஸிகோவைச் சேர்ந்த மருத்துவ மாணவி ஒருவருக்கு ஏற்பட்ட அனுபவம், தற்போது விஞ்ஞானிகளையும் பொதுமக்களையும் ஒருசேர வியப்பில் ஆழ்த்தியுள்ளது.
மெக்ஸிகோவைச் சேர்ந்த 24 வயதான மருத்துவ மாணவி ரூபி ரோல்கு. கடந்த ஆண்டு ஏப்ரல் மாதம், நுரையீரலில் ஏற்பட்ட ரத்த உறைவு காரணமாக இவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். சிகிச்சையின் போது அவருக்கு திடீரென மாரடைப்பு ஏற்பட்டது. சுமார் 10 நிமிடங்கள் அவரது இதயத் துடிப்பு முற்றிலுமாக நின்றது. மருத்துவ ரீதியாக அவர் இறந்துவிட்டதாக கருதிய மருத்துவர்கள், அவரது மூளை செயலிழந்துவிட்டதாகவும், அவர் மீண்டும் பிழைக்க வாய்ப்பில்லை என்றும் குடும்பத்தினரிடம் தெரிவித்தனர். ஆனால், 10 நிமிடங்களுக்குப் பிறகு ஒரு அதிசயம் போல ரூபி மீண்டும் உயிர் பிழைத்தார்.
கண் விழித்த ரூபி கூறிய தகவல்கள் ஒரு அறிவியல் புனைகதை படத்தையே மிஞ்சும் வகையில் இருந்தன. அந்த 10 நிமிட மரணப் போராட்டத்தில், தனது ஆத்மா இருண்ட பகுதிக்குச் செல்லவில்லை என்றும், மாறாக 2030-ஆம் ஆண்டு காலக்கட்டத்திற்குச் சென்றதாகவும் அவர் கூறுகிறார். 2030-ஆம் ஆண்டு உலகம் தற்போதுள்ளதை விட மிகவும் அமைதியாகவும், ஒழுக்கமாகவும் இருக்கும். மக்கள் இன்றைய காலத்தைப் போல ஸ்மார்ட்போன்களுக்கு அடிமையாக இருக்க மாட்டார்கள்.
தானியங்கி முறை மற்றும் நவீன தொழில்நுட்பத்தால் மனித வேலைகள் எளிதாகியிருக்கும். இதனால் மக்கள் குடும்பத்திற்கும் சமூகத்திற்கும் அதிக நேரம் செலவிடுவார்கள். தான் மற்றும் தனது குடும்ப உறுப்பினர்கள் வயதான தோற்றத்தில் இருப்பதை அவர் நேரில் கண்டதாகக் கூறியுள்ளார்.
பொதுவாக மரணம் என்றால் அனைவரும் பயப்படுவார்கள். ஆனால் ரூபியின் அனுபவம் அதற்கு நேர்மாறாக இருந்துள்ளது. எதிர்கால உலகம் அவ்வளவு அமைதியாக இருந்ததால், மீண்டும் மருத்துவமனைக்குத் திரும்பியது அவருக்கு நரகமாகத் தோன்றியதாம். நான் ஒரு ஒளிப் பாதையைக் கண்டேன், திடீரென மருத்துவமனை படுக்கையில் இருந்தேன். கண் விழித்து என் சகோதரனைப் பார்த்தபோது நான் அதிர்ச்சியடைந்தேன். ஏனெனில் 2030-இல் நான் கண்ட என் சகோதரனை விட, இப்போது அவன் மிகவும் சிறியவனாகத் தெரிந்தான் என ரூபி நெகிழ்ச்சியுடன் தெரிவித்துள்ளார்.
மேலும் விஞ்ஞான ரீதியாக இது ஒரு மாயத்தோற்றமா அல்லது உண்மையில் 'டைம் டிராவல்' போன்ற ஒன்றா என்பது குறித்து விவாதங்கள் எழுந்துள்ளன.

