Dailyhunt Logo
  • Light mode
    Follow system
    Dark mode
    • Play Story
    • App Story
"இது சண்டை போடும் களமல்ல, சபை!" மாலை 6 மணி வரை நடக்கும் பஞ்சாயத்து. ஆளுங்கட்சி மற்றும் எதிர்க்கட்சிகளை ஓடவிட்டு வெளுத்தெடுத்த பிரேமலதா.!!"

"இது சண்டை போடும் களமல்ல, சபை!" மாலை 6 மணி வரை நடக்கும் பஞ்சாயத்து. ஆளுங்கட்சி மற்றும் எதிர்க்கட்சிகளை ஓடவிட்டு வெளுத்தெடுத்த பிரேமலதா.!!"

மிழ்நாடு சட்டப்பேரவையின் செயல்பாடுகள் குறித்து தேமுதிக பொதுச்செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் வெளிப்படையாகத் தனது கடுமையான கண்டனங்களைப் பதிவு செய்துள்ளார்.

பேரவைக் கூட்டத்தொடர் மக்களுக்கான விவாதங்களை நடத்தித் தீர்வு காணும் இடமாக இருக்க வேண்டுமே தவிர, வாக்குவாதங்கள் மற்றும் சண்டையிடும் இடமாக மாறுவதைப் பார்த்துப் பொதுமக்களும் தாமும் வேதனை அடைவதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

சட்டப்பேரவையில் மானியக் கோரிக்கைகள் மீதான விவாதங்கள் மற்றும் மக்கள் நலத் திட்டங்கள் குறித்த ஆலோசனைகள் மட்டுமே முதன்மையாக இருக்க வேண்டும். ஆனால், அதற்கு மாறாக அங்கு மற்ற அனைத்துக் காரியங்களும் நடப்பதாகக் குற்றம் சாட்டியுள்ள அவர், ஆளுங்கட்சியும் எதிர்க்கட்சியும் மாறி மாறிப் புகார்களை வாசிப்பதாலேயே விவாதங்கள் நீண்டு மாலை 6 மணி வரை சபை இழுத்தடிக்கப்படுவதாகத் தெரிவித்தார். இதனால் தமிழக மக்களுக்கு என்ன பயன் விளைந்துள்ளது என்ற கேள்ியையும் அவர் அழுத்தமாக எழுப்பியுள்ளார்.

சட்டப்பேரவை உறுப்பினர்கள் பொதுமக்களின் நல்வாழ்வுக்கான சட்டங்களை இயற்றுவதை விட, ஒருவருக்கொருவர் விவாதிப்பதிலும் குற்றச்சாட்டுகளை முன்வைப்பதிலும் தீவிரமாக இரவு பகலாகத் தயாராகி வருவதைக் கிண்டல் செய்யும் வகையில் அவர் கருத்து தெரிவித்துள்ளார்.

">

பள்ளி மாணவர்கள் கூட பொதுத் தேர்வுகளுக்குக் கூட இந்தளவுக்குத் தீவிரமாகத் தயாராக மாட்டார்கள் போலும் என்று விமர்சித்துள்ள பிரேமலதாவின் இந்த அதிருப்திப் பேச்சு தற்போது அரசியல் தளத்தில் பெரும் விவாதத்தை ஏற்படுத்தியுள்ளது.

Dailyhunt
Disclaimer: This content has not been generated, created or edited by Dailyhunt. Publisher: Seithisolai