Dailyhunt Logo
  • Light mode
    Follow system
    Dark mode
    • Play Story
    • App Story
"இதுதான் மனிதநேயம் சார்!".. தண்டவாளத்தில் நின்ற ஒட்டகம், பாய்ந்து வந்து காப்பாற்றிய லோகோ பைலட். வைரலாகும் வீடியோ..!!!

"இதுதான் மனிதநேயம் சார்!".. தண்டவாளத்தில் நின்ற ஒட்டகம், பாய்ந்து வந்து காப்பாற்றிய லோகோ பைலட். வைரலாகும் வீடியோ..!!!

குஜராத் மாநிலத்தில் உள்ள வஞ்ஜலியா மற்றும் ரணவாவ் இடையேயான அகல ரயில் பாதையில் திடீரென ஏற்பட்ட எதிர்பாராத தடையால் ரயில் போக்குவரத்து கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளது.

அந்தப் பகுதியில் உள்ள ஒரு பெரிய ரயில்வே பாலத்தின் தண்டவாளங்களுக்கு இடையில் ஒரு ஒட்டகம் மாட்டிக்கொண்டு வெளியே வர முடியாமல் தவித்தது. அந்த வழியாக தாதரில் இருந்து போர்பந்தர் நோக்கிச் சென்ற சௌராஷ்டிரா எக்ஸ்பிரஸ் (19015) ரயிலின் ஓட்டுநர், தண்டவாளத்தில் ஒட்டகம் நிற்பதை மிகத் தொலைவிலேயே உடனடியாகக் கவனித்தார்.

உஷாரடைந்த லோகோ பைலட் எந்தவிதத் தாமதமும் இன்றி ரயிலின் பிரேக்குகளை உடனடியாக அழுத்தி நிறுத்தியதன் மூலம் ஒரு பெரிய கோர விபத்து நூழிலையில் தவிர்க்கப்பட்டது. இதனையடுத்து உடனடியாக ரயில்வே அதிகாரிகளுக்கும் மீட்புப் படையினருக்கும் தகவல் கொடுக்கப்பட்டது. தண்டவாளத்தின் இடுக்குச் சிக்கலான பகுதியில் அந்த விலங்கு மாட்டிக்கொண்டதால், அதனைப் பாதுகாப்பாக மீட்க பிரத்யேகமாக கிரேன்கள் வரவழைக்கப்பட்டு தீவிர மீட்புப் பணிகள் மேற்கொள்ளப்பட்டன.

இந்தத் திடீர் விபத்து காரணமாக போர்பந்தர் செல்லும் பல்வேறு பயணிகள் மற்றும் விரைவு ரயில்கள் அந்தந்த நிலையங்களிலேயே பாதுகாப்பாகத் தடுத்து நிறுத்தப்பட்டன. மீட்புப் படையினரின் தொடர் முயற்சியால் ஒட்டகம் பத்திரமாக மீட்கப்பட்டுத் தண்டவாளங்கள் முழுமையாகச் சீரமைக்கப்பட்ட பின்னரே வழக்கமான போக்குவரத்து இயக்கப்படும் என அதிகாரிகள் தெரிவித்தனர். ரயில் பாதைகளில் இதுபோன்று விலங்குகள் நுழைந்து இடையூறு ஏற்படுத்தும் சம்பவங்கள் தற்போது சமூக வலைதளங்களில் பலத்த விவாதத்தை ஏற்படுத்தியுள்ளன.

Dailyhunt
Disclaimer: This content has not been generated, created or edited by Dailyhunt. Publisher: Seithisolai