தமிழகத்தில் தேர்தல் களம் சூடுபிடித்துள்ள நிலையில், வேட்பாளர்கள் ஒருபுறம் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டு வர, தொண்டர்கள் தங்கள் பாணியில் நூதனமான முறையில் பரப்புரை செய்து வருகின்றனர்.
அந்த வகையில், நாமக்கல் மாவட்டம் திருச்செங்கோட்டைச் சேர்ந்த இளைஞர் ஒருவர், திமுக மீதான தனது பற்றை வெளிப்படுத்தும் விதமாக தனது தலையின் பின்புறத்தில் 'உதயசூரியன்' சின்னம் போலவே தலைமுடியை வெட்டி, அதற்கு வர்ணம் பூசி அனைவரது கவனத்தையும் ஈர்த்துள்ளார்.
இந்த நூதனப் பிரச்சாரத்தைக் காண அந்தப் பகுதியில் மக்கள் கூட்டம் அலைமோதுகிறது. சலூன் கடையில் மணிக்கணக்கில் அமர்ந்து, மிகத் துல்லியமாக உதயசூரியன் சின்னத்தை தனது தலையில் செதுக்கிக் கொண்ட இந்த இளைஞரின் புகைப்படம் மற்றும் வீடியோக்கள் தற்போது சமூக வலைதளங்களில் காட்டுத்தீயாய் பரவி வருகின்றன. "அரசியல் ஆர்வம் எத்தனையோ வித்தைகளை செய்ய வைக்கும் என்பதற்கு இந்தத் திருச்செங்கோடு இளைஞரே சாட்சி" என நெட்டிசன்கள் கமெண்ட் செய்து வருகின்றனர்.

